🌷பாலைத்திணையையும், காவிரிப்பூம்பட்டினத்தின் வளத்தையும் ஒருங்கே உரைப்பதால் பட்டினப்பாலை என்று பெயர் பெற்றது.
🌷பெரும்பாணாற்றுப்படை இயற்றிய கடியலூர் உருத்திரங்கண்ணனாரே இதன் ஆசிரியர் ஆவார்.
🌷இஃது அகப்பொருட் பாலைத்திணைக்கு உரியது.
🌷301 அடிகள் ஆன இந்நூலில் 138 அடிகள் ஆசிரியப் பாவினாலும், 163 அடிகள் வஞ்சிப்பாவினாலும் ஆகியமையின் இதனை ‘வஞ்சிநெடும்பாட்டு‘ என்றும் ‘பாலைப்பாட்டு‘ என்றும் வழங்குவர்.
🌷அகப்பொருள் மாபின்படி இதில் தலைவன் பெயர் குறிப்பிடப்படவில்லை.
🌷இதற்கு உரை எழுதியவர் நச்சினார்க்கினியர் ஆவார்.
🌷’பொருநாறுபாலை கரிகால்’ என்று பாடப்பட்டோரின் பட்டியல் தரும் வெண்பா உரைப்பதினாலும் இந்நூலின் பாட்டுடைத் தலைவன் சோழன் கரிகாற்பெருவளத்தான் என்பது பெறப்படுகின்றது.
🌷இப்பாடலின் சிறப்பால் சித்தம் களித்த சோழன், புலவர்க்கு அவரின் வறுமை தீரப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசளித்தான் எனும் செய்தியை,
‘தழுவுசெந்தமிழ்ப்பரிசில்வாணர்பொன்
பத்தொடுஆறுநூறாயிரம்பெறப்
பண்டுபட்டினப்பாலைகொண்டதும் ‘
எனக் கலிங்கத்துப்பரணி மற்றும் சங்கர சோழனுலா ஆகிய நூல்கள் உரைக்கின்றன.
🌷அரசனீந்த பதினாறு கால் மண்டபம் ஆயிரம் ஆண்டிற்குமேல் இருந்ததாகக் கூறுவர்.
🌷’தலைவியைப் பொருள் வயின் பிரியக் கருதிய தலைவன் செலவழுங்குதல்‘ என்னும் சார்ந்தது.
🌷குறிஞ்சிப்பாட்டு, முல்லைப் பாட்டு என்பது துறையைச் போல் இதுவும் பாலைப்பாட்டு என்று திணையால் பெயர் பெற்ற நூலாகும்.
தலைவன், தன் நெஞ்சை நோக்கிக் கூறியதாக வரும்,
“முட்டாச்சிறப்பின்பட்டினம்பெறினும்
வாரிருங்கூந்தல்வயங்கிழைஒழிய
வாரேன்வாழியநெஞ்சே!”
“அரிமாஅன்னஅணங்குடைத்துப்பின்
திருமாவளவன்தெவ்வர்க்குஒக்கிய
வேலினும்வெய்யகானம், அவன்
கோலினும்தண்ணியதடமென்தோளே!”
எனும் ஏழு அடிகளுள் பாலைத் திணைக்குரிய செலவழுங்குதல் துறையை அமைத்துக் கூறியுள்ளார்.