பட்டினப்பாலை குறிப்புகள்

பட்டினப்பாலை குறிப்புகள்

🌷பாலைத்திணையையும், காவிரிப்பூம்பட்டினத்தின் வளத்தையும் ஒருங்கே உரைப்பதால் பட்டினப்பாலை என்று பெயர் பெற்றது.

🌷பெரும்பாணாற்றுப்படை இயற்றிய கடியலூர் உருத்திரங்கண்ணனாரே இதன் ஆசிரியர் ஆவார்.

🌷இஃது அகப்பொருட் பாலைத்திணைக்கு உரியது.

🌷301 அடிகள் ஆன இந்நூலில் 138 அடிகள் ஆசிரியப் பாவினாலும், 163 அடிகள் வஞ்சிப்பாவினாலும் ஆகியமையின் இதனை வஞ்சி நெடும்பாட்டு என்றும் பாலைப் பாட்டுஎன்றும்  வழங்குவர்.

🌷அகப்பொருள் மாபின்படி இதில் தலைவன் பெயர் குறிப்பிடப்படவில்லை.

🌷இதற்கு உரை எழுதியவர் நச்சினார்க்கினியர் ஆவார்.

🌷’பொருநாறுபாலை கரிகால்’ என்று பாடப்பட்டோரின் பட்டியல் தரும் வெண்பா உரைப்பதினாலும் இந்நூலின் பாட்டுடைத் தலைவன் சோழன் கரிகாற்பெருவளத்தான் என்பது பெறப்படுகின்றது.

🌷இப்பாடலின் சிறப்பால் சித்தம் களித்த சோழன், புலவர்க்கு அவரின் வறுமை தீரப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசளித்தான் எனும் செய்தியை,  

தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர் பொன்

பத்தொடு ஆறு நூறாயிரம் பெறப்

பண்டு பட்டினப் பாலை கொண்டதும்

எனக் கலிங்கத்துப்பரணி மற்றும் சங்கர சோழனுலா ஆகிய நூல்கள் உரைக்கின்றன.

🌷அரசனீந்த பதினாறு கால் மண்டபம் ஆயிரம் ஆண்டிற்குமேல் இருந்ததாகக் கூறுவர்.

🌷’தலைவியைப் பொருள் வயின் பிரியக் கருதிய தலைவன் செலவழுங்குதல் என்னும் சார்ந்தது.

🌷குறிஞ்சிப்பாட்டு, முல்லைப் பாட்டு என்பது துறையைச் போல் இதுவும் பாலைப்பாட்டு என்று திணையால் பெயர் பெற்ற நூலாகும்.

தலைவன், தன் நெஞ்சை நோக்கிக் கூறியதாக வரும்,

முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்

வாரிருங் கூந்தல் வயங்கிழை ஒழிய

வாரேன் வாழிய நெஞ்சே!”

 

அரிமா அன்ன அணங்குடைத்துப்பின்

திருமா வளவன் தெவ்வர்க்கு ஒக்கிய

வேலினும் வெய்ய கானம், அவன்

கோலினும் தண்ணிய தடமென் தோளே!”

எனும் ஏழு அடிகளுள் பாலைத் திணைக்குரிய செலவழுங்குதல் துறையை அமைத்துக் கூறியுள்ளார்.

🌷சோழநாடு சோறுடைத்து என்பதற்கிணங்க,

சோறு வாக்கிய கொழுங்கஞ்சி

யாறு போலப் பரந்தொழுகி

ஏறு பொரச் சேறாகி

தேரோடத் துகள் கெழுமி

வெண்கோயில் மாசூட்டும்”

                                                 என்று சோற்றுவளம் கூறப்பட்டுள்ளது.

நெடுநுகத்துப் பகல்போல

நடுவுநின்ற நன்னெஞ்சினோர்

வடுவஞ்சி வாய்மொழிந்து

தமவும் பிறவும் ஒப்ப நாடிக்

கொள்வ தூஉம் மிகைகொளாது

கொடுப்பதூஉம் குறைகொடாது

                                                          – வணிகரின் நடுவுநிலைமை

நேரிழை மகளிர் உணங்குஉணாக் கவரும்

கோழி எறிந்த கொடுங்காற் கனங்குழை

பொற்காற் புதல்வர் புரவியின்று உருட்டும்

முக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும்

                                                         – செல்வவளம் பற்றி

திருமா வளவன் தெவ்வர்க் கோக்கிய

வேலினும் வெய்ய கானம், அவன்

கோலினும் தண்ணிய தடமென் றோளே

                                                     – அரசன் சிறப்பு

🌷உள்நாட்டு வெளிநாட்டு வாணிப வளமும், வாணிப நேர்மையும், திருமாவளவனின் வீரமும், பரதவர் வாழ்க்கைமுறைகளும், காவிரிப்பூம்பட்டினத்து வளமும், மேன்மையும், பெருமையும் வருணித்திருக்கும் ஆசிரியரின் புலமைத்திறம் போற்றுதற்குரியதே.

🌷இத்துணைச் சிறப்புகள் இருப்பதினால்தான் இந்நூல் அரங்கேறிய 16-கால் மண்டபமும் கவிஞர்க்கு பரிசாக அளிக்கப்பட்டுவிட்டது.

🌷இம்மண்டபம் 1000 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து நின்றதாகத் தெரிகிறது.

🌷சோழநாட்டை அழித்த சுந்தர பாண்டியன் புலவரின் பரிசு பொருளான இம்மண்டபம் தவிரப் பிற அனைத்தையும் அழித்துவிட்டதாகக் கல்லெட்டுச் செய்துள்ளான்.

🌷கரிகாலனின் வீரம், உயர்ந்த உள்ளம், பரதவர் வாழ்க்கை, கடல்வாணிகம், துறைமுகச் சிறப்பு ஆகியவை ஓவியமாக்கப்பட்டுள்ளன.

🌷இறக்குமதிப் காவிரி கடலொடு கலக்கும் காவிரிப்பூம்பட்டினச் பொருளுக்குச் சுங்கம் வகுலித்தல்

🌷ஏற்றுமதி இறக்குமதிப் பொருள் மீது சோழனின் புலிச்சின்னம் பொறித்தல்,

🌷பரதவர் சுறாக்கொம்பை மணலில் நட்டுக் கடல்தெய்வத்தை வழிபடல்

🌷பொருளை இனங்காண அங்காடியில் பலவகைக் கொடிகளை நட்டு வைத்தல் போன்ற அரிய செய்திகள் பட்டினப்பாலையில் மிளிர்கின்றன.

🌷இந்நூலுக்கு மறைமலை அடிகளும், இரா. இராகவையங்காரும் ஆராய்ச்சி உரைநூல் எழுதியுள்ளனர்.

Leave a Reply

Translate »