🏀தமிழ்மறை என்றும் பொதுமறை என்றும் போற்றப்படும் சிறப்புடையது திருக்குறள்.
காலம்
🏀கி.மு. முதல் நூற்றாண்டு – மறைமலை அடிகள்
🏀கி.மு. 1, 2 ஆம் நூற்றாண்டு – இராமச்சந்திர தீட்சிதர்
🏀கி.மு. முதல் நூற்றாண்டுகளில் – மா. இராமாணிக்கனார்
🏀மறைமலை அடிகள், திருள்ளுவர் கி.மு. 31இல் பிறந்தார் எனக் கூற வள்ளுவராண்டு கணக்கிடச் செய்தார்.
🏀வையாபுரிப்பிள்ளை கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் தோன்றியது என்றார்.
🏀சோமசுந்தர பாரதியார் சுப்பிரமணிய ஆச்சாரியார் போன்றோர் இகனை முறையே திருவள்ளுவர் திருக்குறளும் காலமும் என்ற நூல்களில் வன்மையாக மறுத்துள்ளார்.
இந்நூல் கடைச்சங்க காலத்தின் (மற்பகுதியைச் சார்ந்த சரியானது.
சமயம்
🏀திருக்குறளை இயற்றியவரான திருவள்ளுவர் எல்லாச் சமயத்திற்கும் பொதுவான கருத்துக்களை மொழிந்துள்ளனர்.
🏀தனியொரு சமயம் சாராதவர்கள் அவரை சமயத்திற்குள் அடக்க ஒவ்வவொருவரும் முயன்றனர்.
🏀சமய நூலான நீலகேசிக்கு உரை எழுதிய சமய திவாகர முனிவர் தம் உரையில் திருக்குறளை எடுத்துக்காட்டி “இது எம் ஒத்து ஆதலின்” எனத் திருவள்ளுவரைச் சமணராகக் கொண்டு மொழிகிறார்.
🏀தமிழின் முதல் எழுத்தான அகரத்தில் தொடங்கி இறுதி எழுத்தாகிய னகரத்தில் முடிவது பாராட்டத்தக்கது.
🏀அறத்துப்பாலும், பொருட்பாலும் ஆசிரியர்கூற்றாக உள்ளன.
🏀காமத்துப் பால் ஆசிரியர் கூற்றாக இல்லாமல் அகப்பொருள் மாந்தர் கூற்றாக அமைந்துள்ளது.
🏀சங்க இலக்கியங்களிலும் இவ்வாறே புறப்பாடல்கள் ஆசிரியர் நேரேகிளத்தும் தன்னுணர்ச்சிப் பாடல்களாகவும் மாந்தர் கூற்றாக அமைந்துள்ளது.
🏀பொது உணர்ச்சிப் பாடல்களாகவும் விளங்குகின்ற இவ்வகையில் சங்கப்புற அக இலக்கியங்களும் திருக்குறளின் புற அகப்பாடல்களாகிய குறள்களும் தமக்குள் ஒத்து நிற்பதை உணரமுடியும்.
🏀அறத்துப்பாலுக்கும் பொருட்பாலுகள் உரிய குறள்கள் அனைத்தும் செவியறிவுறூஉ. பொருள் மொழிக் காஞ்சி போன்ற புறத்துறைக்குள் அடங்கும்.
🏀திருக்குறளை அகப் புறம் பொருளிலக்கண நோக்கில் பகுத்து உரை எழுதாததால் சங்க இ. எதிரிடையாகத் தோன்றுகின்றன.
சிறந்தபகுதிகள்
🏀திருக்குறளில் அனைத்தும் சிறந்தவைதாம்.
“பிறப்பொக்கும்எல்லாஉயிர்க்கும்”
“பகுத்துண்டுபல்லுயிர்ஓம்புதல்நூலோர்
தொகுத்தவற்றுள்எல்லாம்தலை”
“உற்றநோய்நோன்றல்உயிர்க்குறுகண்செய்யாமை
அற்றேதவத்திற்குஉரு”
“மனத்துக்கண்மாசிலன்ஆதல்அனைத்துஅறன்”
“வாய்மைஎனப்பாடுவதுயாதெனின்யாதொன்றும்
தீமைஇலாதசொலல்”
“அறத்தான்வருவதேஇன்பம்”
“அன்பும்அறனும்உடைத்தாயின்இல்வாழ்க்கைப்
பண்பும்பயனும்அது”
“அரம்போலும்கூர்மையரேனும்மரம்போல்வர்
மக்கட்பண்பில்லாதவர்”
“அறிவுடையார்எல்லாம்உடையார்”
“ஒழக்கம்விழுப்பம்தரலான்ஒழுக்கம்
உயிரினும்ஓம்பப்படும்”
“பண்புடையார்ப்பட்டுண்டுஉலகம்”
“முயற்சிதிருவினைஆக்கும்”
“எழுதுங்கால்கோல்காணாக்கண்ணேபோல்கொண்கன்
பழிகாணேன்கண்டவிடத்து‘
“நீங்கின்தெரூஉம்குறுகுங்கால்தண்ணென்னும்
தீயாண்டுப்பெற்றாள்இவள்“
🏀திருக்குறளை நச்சினார்க்கினியர், ‘திருவள்ளுவப்பயன்’ எனக் குறிப்பிடுவார்.
🏀திருவள்ளுவர், என்றே சில ஓலைச் சுவடிகளில் திருக்குறள் சுட்டப்படுகிறது.
திருவள்ளுவரைச்சுட்டும்சிறப்புப்பெயர்கள்
🏀நூலும் நூலாசிரியரும் பல சிறப்புப் பெயர்களால் குறிக்கப்படுகின்றனர். நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர். நான்முகன், மாதானுபங்கி, செந்தாப் போதார். பெருநாவலர், பொய்யில் புலவன் முதலியன.
திருக்குறளைச்சுட்டும்சிறப்புப்பெயர்கள்
🏀திருக்குறளைச் சிறப்பிக்கும் பழம் பெயர்களாவன. முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ்மறை, பொதுமறை, திருவள்ளுவம் போன்றவை ஆகும்.
திருக்குறளின்பழையஉரையாசிரியர்கள்
🏀தருமர், மணக்குடவர், தாமத்தார், நச்சர், பரிமேலழகர், திருமலையர், மல்லர் பரிப்பொருமாள், காலிங்கர், வள்ளுவர் ஆகியோர் ஆவார்கள்.