தற்குறிப்பேற்ற அணி இலக்கணம்

தற்குறிப்பேற்ற அணி

தன்+குறிப்பு+ஏற்றுதல் = தற்குறிப்பேற்றம். உலகத்தில் இயல்பாக நடக்கின்ற ஒரு நிகழ்வுக்கு ஆசிரியர் தன்னுடைய கற்பனையை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.

தற்குறிப்பேற்ற அணியானது இரண்டு வகையாகக் குறிக்கலாம். அவை,

01)பெயர் பொருள் தற்குறிப்பேற்றம்

02)பெயராப்பொருள் தற்குறிப்பேற்றம்

தாரணம் : 1         

             மண்படுதோட் கிள்ளி மதயானை மாற்றரசர்

            வெண்குடையைத் தேய்த்து வெகுளியால்விண்படர்ந்து

            பாயுங்கொல் என்று பனிமதியம் போல்வதூஉம்

            தேயும் தெளிவிசும்பி னின்று

            உலகத்தை தாங்குகின்ற தோள் வலிமையையுடைய சோழ மன்னனின் பட்டத்து யானை, பகை மன்னர்களின் வெண்கொற்றக் குடைகளைத் தன் துதிக்கையால் சீறி அழிக்கிறது. இவற்றைக் கண்ட விண்ணில் படர்ந்து இருக்கும் சந்திரன் தன்மேலும் பாயுமோ என்று அச்சம் கொண்டு தேய்கிறதாம்.

            சந்திரன் தேய்வதும்  வளர்வதும் இயற்கையே. ஆனால் சந்திரன் தேய்வது என்பது சோழனின் யானைக்குப் பயந்துதான் என்கிறார் ஆசிரியர்.

தாரணம் : 2         

“மன்னனின் புகழைக் கேட்கவே நிலவு விரைந்து எழுந்தது.”

💐 நிலவு எழுவது இயற்கை நிகழ்வு.

💐ஆனால், மன்னனின் புகழைக் கேட்கவே எழுந்ததாகக் கவிஞர் கற்பனை செய்து கூறியுள்ளார்.

💐எனவே இது தற்குறிப்பேற்ற அணி ஆகும்.

தாரணம் : 3

“தமிழின் இனிமையைக் கேட்கக் குயில் பாடியது.”

இங்கு குயில் பாடுவது இயல்பான செயல். ஆனால் தமிழின் இனிமையைக் கேட்பதற்காகப் பாடியது என்று கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக் கூறியுள்ளார்.

 

Leave a Reply

Translate »