🏀மதுரையை ஆட்சிபுரிந்து வந்த தலையாலங்கானத்துச்செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
🏀பொருட்செல்வம், இளமை, யாக்கை போன்ற உலக இன்பங்கள் நிலையற்றவை என்று காஞ்சித் திணையை விரித்துக் கூறுவது மதுரைக் காஞ்சி ஆகும்.
🏀நிலையாமை அறிவுறுத்தப்பட்டோன் பாண்டியன் நெடுஞ்செழியன்.
🏀மதுரை மாநகரின் கண்ணுள்ள மன்னனுக்குக் காஞ்சித் திணையை உணர்த்துவது என்று பொருள்படும்.
🏀முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு திணையால் என்பன காஞ்சிப்பாட்டு போன்று என்று இதனையும் வழங்குவர்.
🏀பத்துப்பாட்டு நூல்களுள் புறத்திணையின் பெயரால் அமைந்த நூல் இது ஒன்றே.
🏀இதன் ஆசிரியர் பாண்டிய மன்னனால் பெரிதும் பாராட்டப்பட்ட மாங்குடி மருதனார் ஆவார்.
🏀மாங்குடி மருதனாருக்கும் பாட்டுடைத் தலைவனான பாண்டியன் நெடுஞ்செழியனுக்குமிடையே இருந்த நெருக்கத்தை பாவலனாகத் திகழ்ந்த பாண்டியன் தான்பாடிய புறநானூற்றுப் பாடலில்
‘ஓங்கியசிறப்பின்உயர்ந்தகேள்வி
மாங்குடிமருதன்தலைவனாக
உலகமொடுநிலைஇயபலர்புகழ்சிறப்பின்
புலவர்பாடாதுவரைகஎன்நிலவரை‘
என்று வஞ்சினம் உரைத்திருத்தளினின்று அறியலாம்.
🏀காஞ்சி என்பது புறத்திணைகளில் ஒன்று ‘காஞ்சிதானேபுறத்திணைப்புறனே‘ என்பது தொல்காப்பியம்
‘பாங்கருஞ்சிறப்பின்பல்லாற்றானும்
நில்லாஉலகம்புல்லியநெறித்தே‘
என்று தொல்காப்பியம் உரைத்துள்ள இலக்கணத்தின் படியே ஆசிரியர் இதனைப் பாடியுள்ளார்.
🏀பாண்டியர் பெருமை, நாட்டுவளம், போர்வென்றி முதலியன கூறப்படுகின்றன.
🏀பாண்டியரின் மதுரை நகர்வளம் கூறப்பட்டுள்ளது. மதுரை மா நகரத்தின் அமைப்பையும், சிறப்பையும் களிறு மாய்க்கும் கதிர் வளமுடைய பாண்டிய நாட்டின் நிலவளத்தையும் கூறியுள்ளார்.
🏀நாளங்காடி அல்லங்காடி, ஆகியவற்றின் சிறப்புயையும்
🏀கொற்கைக் கடலில் முத்துக் குளித்தல், சைவக் கோயில்கள், சமணப் பள்ளிகள், பௌத்தப் பள்ளிகள் இருந்தமை ஆகிய அனைத்தும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.
🏀346 ஆவது அடி முதல் 699 அடி வரையிலான 354 அடிகளில்
‘புத்தேள்உலகம்கவினிக்காண்வர
மிக்குபுகழ்எய்தியபெரும்பெயர்மதுரை‘ (698-699)
என்று மதுரையிலுள்ளார் முதல் நாள் காலை தொடங்கி மறுநாள் காலை வரை பொழுது போக்கும் முறை இந்நூலில் விரிவாக உரைக்கப்பட்டுள்ளது.
🏀டாக்டர் மு.வ. அவர்கள் தனது தமிழ் இலக்கிய வரலாற்று நூலில் இவ்வாறு 354 அடிகளில் மதுரை நகரம் சுற்றிக் காட்டப்படுகிறது. ஒருவர் ஒரு நாள் போல காலையில் தொடங்கி மறுநாள் விடியற்காலை வரையில் நகரத்தைச், சுற்றி வந்து கண்டவற்றை முறைபடக் கூறுவது வருணனை அமைந்துள்ளது’ – என்று கூறுகிறார்.
🏀அகத்தியர் இராவணனைத் தமிழ்நாட்டுப் பக்கம் வாராது தடுத்தமை.
🏀மேலும் மன்னனது கொடையும், அவனைப் புலவர் வாழ்த்துவதும் இடம் பெறுகின்றன.
🏀பாண்டியரின் பெருமையோடு தொடங்கி, மதுரை மாநகரின் மாண்புடன் வளர்ந்து உலக நிலையாமையை உணர்த்தும் காஞ்சித் திணையுடன் முடியும்.
🏀இதில் உலக நிலையாமையை உணர்த்தும் ஆசிரியர் துறவையோ, காட்டிற் சென்று செய்யும் கடுந்தவத்தையோ வற்புறுத்தாது ‘தேறல் உண்டு மகிழ்ந்து வாழ்க’ எனக் கூறுவதன் மூலம் ஒரு புதுமை புகுத்தியிருப்பதைக் காணலாம்.
🏀இந்நூலில் மதுரைக் கோயில்களில் நடைபெறும் விழாக்கள் மாத்திரமின்றி, திருப்பரங்குன்றத்தில் நடை பெறும் விழா, திருவோணநாள் விழா, அந்திவிழா, ஏழு நாட்கள் நடைபெறும் விழா, மன்னன் பிறந்தநாள் விழா போன்ற பல விழாக்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
🏀சிற்சில இடங்களில் வான நூற்குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன.
🏀முடிசார்ந்தமன்னரும்முடிவில்ஒருபிடிசாம்பலாவார்’ என்னும் பழமொழியின்படி நிலையாமை தெளிவாக உணர்த்தப்படுகின்றது.
🏀மதுரை மாநகரின் மதில் பெருமையும், காவற் சிறப்பும், மதுரை வரலாறும், நெடுஞ்செழியன் வரலாறும் உரைக்கும் இப்பாட்டு வரலாற்றுக்குப் பயன்படும் ஒரு குறுங்காப்பியம் எனப்படும் பெருமைக்குரியதாகத் திகழ்கின்றது.
🏀சங்ககால நெடும்பாடல்களான பாடல்களும் சங்ககாலத் தமிழர்களின் இப்பத்துப் அக, புற வாழ்வியலை அறிந்து கொள்ளப் பெரிதும் துணை புரிகின்றன.
🏀பழந்தமிழ் நாட்டின் வாணிபம், செல்வம், சமயம், சமுதாயம், விருந்தோம்பல், பழக்க வழக்கங்கள், உணவு முறை, நாகரிகம், ஓவியம், சிற்பம், கட்டடம் போன்ற கலையறிவு பற்றியும்
🏀மதுரை, காவிரிப்பூம்பட்டினம், வஞ்சி முதலிய மூவேந்தர் பெருநகரங்களையும், வேலூர், ஆமூர் போன்ற சிறு நகரங்களையும் வேறு பல சிற்றூர்களையும், நால்வகை நில மக்களின் தொழில்முறை வாழ்க்கை நிலைகளையும், புலவர், பாணர், பொருநர், கூத்தர் ஆகிய கலைஞர்களைப் புரவலர்கள் போற்றிப் பாராட்டிப் பரிசளித்துப் பெருமைப்படுத்தியதையும் அறிவதற்குப் பெரிதும் உறுதுணையாக நிற்கின்றன.
🏀புலி புலி எனக் கூறும் மகளிர் முன் வேங்கை மரம் பூக்கொய்யு மாறு தாழ்ந்து நிற்றல் ஆகிய புதிய செய்திகளும் கூறப்பட்டுள்ளன.
🏀வான நூற் செய்தி போர் முறை. பாண்டியர் மரபு, சமயம் ஆகியனவும்
🏀மதுரை, புகார், வஞ்சி, வேலூர் ஆமூர் முதலிய ஊர்களும்
🏀அந்தணர் பள்ளி, சமணர் பள்ளி, பௌத்தப் பள்ளி ஆகியனவும் சுட்டப்பட்டுள்ளன.