தமிழகத்தின் நீர்நிலைப் பெயர்கள்|tnpsctime
🌻அகழி- கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்
🌻அருவி – மலைமுகட்டிலிருந்து நீர் குத்திட்டு வீழ்வது
🌻ஆழிக்கிணறு – கடலருகே தோண்டிக் கட்டிய கிணறு
🌻ஆறு – இரு கரைகளுக்கிடையே ஓடும் நீர்ப்பரப்பு
🌻இலஞ்சி – பலவகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம்
🌻உறைக்கிணறு – மணற்பாங்கான இடத்தில் தோண்டிச் சுடுமண் வளையமிட்ட கிணறு
🌻ஊருணி – மக்கள் பருகுநீர் உள்ள நீர்நிலை
🌻ஊற்று – அடியிலிருந்து நீர் ஊறுவது
🌻ஏரி – வேளாண்மைப் பாசன நீர்த்தேக்கம்.
🌻கட்டுக்கிணறு – சரளை நிலத்தில் தோண்டி கல், செங்கற்களால் அகச்சுவர் கட்டிய கிணறு
🌻கடல் – அலைகளைக் கொண்ட உப்புநீர்ப் பெரும்பரப்பு
🌻கண்மாய் – பாண்டி மண்டலத்தில் ஏரிக்கு வழங்கப்படும் பெயர்
🌻குண்டம் – சிறியதாய் அமைந்த குளிக்கும் நீர்நிலை
🌻குண்டு – குளிப்பதற்கேற்ற சிறுகுளம்
🌻குமிழி ஊற்று – அடிநிலத்து நீர், நிலமட்டத்திற்குக் கொப்புளித்து வரும் ஊற்று
🌻கூவல் – உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை
🌻கேணி – அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு
🌻புனற்குளம் – நீர்வரத்து மடையின்றி மழைநீரையே கொண்டுள்ள குளிக்கும் நீர்நிலை
🌻பூட்டைக் கிணறு – கமலை நீர்பாய்ச்சும் அமைப்புள்ள கிணறு
குறிப்பு : 9 ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.

