🌻ஆற்றுப் படைகளுள் பெரியது. இதன் அடிகள் 583 ஆசிரியப்பாவால் ஆனது.
🌻இந்நூலில் “மலைபடுகடாம் மாதிரத்து இயம்ப” என்ற தொடர் காணப்படுகிறது.
🌻இதன் பொருள், “மலைகளாகிய யானைக்கு உண்டாகின்ற மதநீராகிய திசைகள் எல்லாம் ஒலிப்ப” என்பது.
🌻பொருட்தொடர் இதில் இருத்தலின், இந்நூலிற்கு இப்பெயரே சூட்டி வழங்கினர்.
🌻இது யானைக்கு மலையை உவமையாகக் கூறியும் யானை பொழியும் மத நீரின் ஓசையை மலையில் தோன்றும் பல வகை ஓசைக்கு உவமை ஆக்கியும் மலைபடுகடாம் என்ற தொடரைக் கையாண்டமையால், இப்பாடல் மலைபடுகடாம் எனப் பெயர் பெற்றது.
🌻நன்னனது குலம் வேளிர்குலம்.
🌻இவன் தொண்டை மண்டலத்தின் பலகுறைக் கோட்டத்து அரசன் ஆவான்.
🌻தலைநகரம் செங்கண்மா ஆகும்.
🌻பரிசில் பெறவரும் கூத்தன் ஒருவனைப் பரிசில் பெற்றான் ஒருவன் ஆற்றுப்படுத்தியதாக இதில் கூறப்பட்டிருத்தலின் இது “கூத்தராற்றுப்படை” என்றும் வழங்கப்பெறும்.
🌻இதனைப் பாடியவர் “இரணிய பெறும் முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகனார்” என்பவர்.
🌻நன்னன் நாட்டிற்குச் செல்லும் வழி வழியில் கிட்டும் உணவுகள். சோலையின் அழகு, மலைவளம் நாட்டின் சிறப்பு, நன்னனின் முன்னோர் பெருமை சிவனின் அருள், நன்னனின் நவிரமலை சேயாறு, அரசன் வீற்றிருக்கை, வேடர் குறவர் இடையர் வாழ்க்கை நிலை. வணிகவளம், அரசனின் கொடை பண்பாடு. இசை, கலை போன்ற பலவும் இப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.
🌻இசையியங்கள் பற்றிய குறிப்புக்களும் யாழ் வண்ணனையும் விழுமியவாய் உள்ளன.
🌻கவர்த்த வழித்தடத்தை அறியப் புல் முடிந்து வைத்தல், மாதர் பாடிப் புண்ணால் வருந்தும் வருத்தத்தை மாற்றல் முதலிய புதுச்செய்திகள் காணப்படுகின்றன
🌻எல்லரி. குறுந்தூம்பு. தட்டை, பதலை, பாண்டில், கரடிகை போன்ற இசைக்கருவிகள் சுட்டப்பட்டுள்ளன.
🌻விறலியின் உடலழகை அளவாக வருணித்தல், ஆற்றிடைக் காட்சிகளைத் தொகுத்துரைத்துப்பின் ஒவ்வொன்றாக விரித்துரைத்தல் போன்றவை இதன் சிறப்புக்களாம்.