சிறுபாணாற்றுப்படை நூல் குறிப்புகள்

சிறுபாணாற்றுப்படை

🎯பண்பாடுவோர் பாணராவர்


🎯பாணர்கள் – இசைப்பாணர், யாழ்ப்பாணர், பிச்சை ஏற்றுப் பிழைக்கும் மண்டைப்பாணர் என மூவகைப்படுவர்.


🎯சிறிய யாழை வாசிப்போரைச் சிறுபாணர் என்றும், பெரிய யாழை வாசிப்போரைப் பெரும்பாணர் என்றும் பாகுபடுத்துவர்.


🎯இது யாழ்ப்பாணருள் சிறுபாணரை ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது.


🎯இந்நூல் 269 அடிகளை உடையது. பாணாற்றுப்படை நூல்களுள் அடி அளவால் சிறிதாக உள்ளது.


🎯பரிசு பெற்ற பாணன் பரிசில் பெறவிருக்கும் பாணனை ஓய்மாநாட்டு நல்லியக்கோடனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது.

🎯இப்பாடல், ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது.


🎯இதனைச் “சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப் படை” எனத் தக்கயாகப் பரணியுரை குறிப்பிடும்.


🎯சிறிய யாழைக்கொண்ட பாணனை ஆற்றுப்படுத்தியமையாலும் சிறு பாணாற்றுப்படை என்று வழங்கி யிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.


🎯இந்நூலுள் “இன்குரல் சீறியாழ் இடவயின் பெரும்பாணாற்றுப் படையில் தழீஇ’ என்றும் 462 ஆம் அடியில் “இடனுடைப் பேரியாழ்” என்றும் வருவதால் யாழால் வந்த வேறுபாடே பெரும்பாணர், சிறுபாணர் என்ற பகுப்புக்குக் காரணமாகும் என்று தெரிகின்றது.


🎯ஓய்மாநாட்டு நல்லியக்கோடனை, இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடிய பாட்டாகும்.


🎯இதனைச் “சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப் படை என்பர் தக்கயாகப் பரணி உரையாசிரியர்.


சிறுபாணாற்றுப்படைபெயர்விளக்கம்

🎯அடியளவில் சிறுமையுடைத்தாதல், ‘இன்குரற்சீறியாழ் இடவயிற் றழீஇ’ என்ற அடியைக் கொண்டிருத்தல் சிறுபாண்குடியினரை ஆற்றுப்படுத்தல். சில பண்ணறிந்தமை ஆகியவை காரணமாக இப்பாடல் சிறுபாணாற்றுப் படை எனப் பெயர் பெற்றது.


சிறப்புகள்

🎯விறலி வண்ணனை, மூவேந்தர் தலைநகரச் சிறப்பு, கடையெழு வள்ளல்களின் கொடைத்திறம், சிறுபாணரின் வறுமை, நெய்தல் முல்லை மருதநில வாழ்க்கை, யாழின் பகுதி, பண்ணின் சிறப்பு ஆகியவையும்


கடையெழுவள்ளல்கள்: 

பாரி, காரி, ஓரி, ஆய் அண்டிரன், அதியமான், பேகன், நல்லி


🎯நல்லியக் கோடனின் வீரம் கொடை விருந்தோம்பல் பரிசளிக்கும் திறன். ஆகியன விளக்கப்பட்டுள்ளன.


🎯ஆமூர், வேலூர், விலங்கை போன்ற ஊர்கள் சுட்டப்பட்டுள்ளன.


திறவாக்கண்ணசாய்செவிக்குருளை

கறவாப்பால்முலைசுவர்தல்நோனாது

புனிற்றுநாய்குரைக்கும்புல்லென்அட்டில்

காழ்சேர்முதுசுவர்க்கணச்சிதல்அரித்த-பாணரின்வறுமை

முதுவோர்க்குமுகிழ்ந்தகையினை

இளையோர்க்குமலர்ந்தமார்பினை

ஏரேசர்க்குநிழன்றகோலினை

தேரோர்க்குஅழன்றவேலினை– நல்லியக்கோடன்சிறப்பு

Leave a Reply

Translate »