திருக்குறள் சிறப்புகள்

திருக்குறள் சிறப்புகள்

🏀முற்காலப்புலவர்கள் திருக்குறளைப் பாராட்ட திருவள்ளுவமாலையாக நுல் எழுதி வெளிட்டனர்.

🏀 “உயர்ந்த ஞானத்தைப் புகட்டும் செம்மொழிகளில் திருக்குறள் போல உலக இலக்கியத்தில் வேறு எங்கும் இல்லை  என்பார் ஆல்பர்ட் சுவைச்சர்.

🏀வள்ளுவன் தன்னை உலகினுக் கேதந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு   – பாரதியார்

🏀வள்ளுவர் செய்திருக்குறளை மறுவறநன்கு உணர்ந்தோர்கள்

உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக்கு ஒருநீதிபேரா. சுந்தரம்பிள்ளை

🏀  நிலைத்தமிழின்

தெய்வப்புலமைத் திருவள்ளுவருரைத்த

மெய்வைத்த சொல்உமாபதிசிவம், நெஞ்சுவிடுதூது,

🏀சார்ஸ், இ. கோவர். கால்டுவெல், லாசரஸ், எல்லிஸ் போன்ற மேனாட்டார் புகழுரைகளும் தமிழகச் சான்றோர்களின் போற்றுரைகளும் பலப்பல.

🏀திருக்குறளை இறுதியில் கொண்ட முதுமொழி வெண்பாக்கள் தோன்றி உள்ளமையும் திருக்குறட்குச் சிறப்பு.

🏀அவை இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா, வடமலைவெண்பா, குமரேச வெண்பா எனப் பலவாம்.

🏀எல்லா உரையாசிரியர்களும் திருக்குறளை மேற்கோள்காட்டியுள்ளனர்.

🏀தமிழ்மறை என்றும் பொதுமறை என்றும் போற்றப்படும் சிறப்புடையது திருக்குறள்.

காலம்

🏀கி.மு. முதல் நூற்றாண்டு – மறைமலை அடிகள்

🏀கி.மு. 1, 2 ஆம் நூற்றாண்டு – இராமச்சந்திர தீட்சிதர்

🏀கி.மு. முதல் நூற்றாண்டுகளில் – மா. இராமாணிக்கனார்

🏀மறைமலை அடிகள், திருள்ளுவர் கி.மு. 31இல் பிறந்தார் எனக் கூற வள்ளுவராண்டு கணக்கிடச் செய்தார்.

🏀வையாபுரிப்பிள்ளை கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் தோன்றியது என்றார்.

🏀சோமசுந்தர பாரதியார் சுப்பிரமணிய ஆச்சாரியார் போன்றோர் இகனை முறையே திருவள்ளுவர்  திருக்குறளும் காலமும் என்ற நூல்களில் வன்மையாக மறுத்துள்ளார்.

இந்நூல் கடைச்சங்க காலத்தின் (மற்பகுதியைச் சார்ந்த சரியானது.

சமயம்

🏀திருக்குறளை இயற்றியவரான திருவள்ளுவர் எல்லாச் சமயத்திற்கும் பொதுவான கருத்துக்களை மொழிந்துள்ளனர்.

🏀தனியொரு சமயம் சாராதவர்கள் அவரை சமயத்திற்குள் அடக்க ஒவ்வவொருவரும் முயன்றனர்.

🏀சமய நூலான நீலகேசிக்கு உரை எழுதிய சமய திவாகர முனிவர் தம் உரையில் திருக்குறளை எடுத்துக்காட்டி “இது எம் ஒத்து ஆதலின்” எனத் திருவள்ளுவரைச் சமணராகக் கொண்டு மொழிகிறார். 

🏀இலக்கியக் கொள்கைக்கு மாறானவையும் சமணத்தின் கொள்கையாக உள்ளவையுமான கொல்லாமை, புலால்மறுத்தல் கள்ளுண்ணாமை போன்றவற்றைத் திருக்குறளில் வற்புறுத்தியுள்ளமையைத் தம் கருத்திற்கு அரணாக்குவர் சமணர்.

🏀பகவன், மலர்மிசை ஏகினான் போன்றவற்றையும் சமணச் சார்பினவாகக் கொள்வர்.

🏀காதல், இல்லறம் ஆகியவற்றைப் போற்றும் வள்ளுவர் கருத்துக்கள் சமணக் கொள்கைக்கு மாறானவை என்பதை இங்கு நினைத்துப் பார்க்கவேண்டும்.

🏀சைவரும் வள்ளுவரை நாயனார் என்றே அழைப்பர்.

🏀வைணவரும் மூவுலகை ஈரடியால் அளந்தமை கூறல் தாமரைக்கண்ணான் உலகு போன்ற தொடர்களைக் கொண்டு வள்ளுவரை வைணவராக்குவர்.

🏀வள்ளுவர் காவியம் இயற்றிய அ.கி நாயுடு (கோவை) வள்ளுவரை வைணவராகக் கொண்டதுடன் அட்டைப் படத்திலுள்ள வள்ளுவருக்கு நாமம் போட்டிருப்பது நகையினை உண்டாக்கும்.

🏀வள்ளுவரின் குறள் குறிப்பிட்ட ஒரு சமயத்தது அன்று என்று குறிப்பிடும்.

 🏀சமயங்கடந்ததும் எல்லாச்சமயத்து உயர் கருத்துக்களையும் தன்பால் கொண்டு விளங்குவதுமான திருக்குறளை உலகப்பொதுமறை என்னலில் வியப்பில்லை.

வள்ளுவர் வரலாறு

🏀திருவள்ளுவர் மயிலாப்பூரில் பிறந்தாரென்றும் வாசுகியை மணந்தாரென்றும் கூறுவர்.

🏀வள்ளுவரின் பிறப்பு வாழ்க்கை,  குறள் அரங்கேற்றம் ஆகியவை பற்றிப் புராணப் போக்கிலான கதைகள் பல உள்ளன.

🏀யாளிதத்தன் என்னும் அந்தணனுக்கும் ஆதி என்னும்
புலச்சிக்கும் பிறந்தவர் என்பர்.

🏀திருவள்ளுவருடன் பிறந்தவர் கபிலர் என்ற கூற்றும் உண்டு.

🏀சங்கப்புலவரின் எதிர்ப்புக்கிடையே நூல் அரங்கேற்றி வெற்றி பெற்றார் என்றும் கூறுவர்.

🏀வள்ளுவர் என்ற பெயர் குடிப்பெயர் அல்லது தொழிற்பெயராக இருக்கலாம்.

🏀அவர் அரசனின் உள்படுகருமத்த தலைவராக விளங்கினார் என்றும்,

🏀ஈழமன்னன் ஏலேல சிங்கனின் உற்றநண்பர் என்றும் மொழிவர்.

🏀அவரின் வரலாறு தெளிவாகத் தெரியவில்லை என்றாலும் அவர் அறிஞர், பொதுமை நாட்டம் மிக்கவர், சமய வேடங்களையும்  மூடநம்பிக்கைகளையும் சாடியவர்.

நூலமைப்பு
🏀அதிகாரத்திற்குப் பத்துக்குறள் வீதம் 133 அதிகாரங்கள் 1330 குறள் வெண்பாக்களையும் கொண்டது.

🏀திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்ற முப்பொருள்களையும் முப்பாலாகமொழிகிறது.

🏀வீடுபேறு இத்தன்மைத்து எனக்கூற முடியாதததாகலின் அது பற்றிக் கூறவில்லை.  எனவே வள்ளுவர் நெறி வடவர் நெறியன்று.

🏀தமிழ்க்குரிய தண்ணெறி அது முப்பால்களும் ஒன்பது இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளன

🏀அறத்துப்பால்        – பாயிரம், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்

🏀பொருட்பால்          – அரசியல். அங்கவியல், குடியியல்

🏀காமத்துப்பால் அல்லது இன்பத்துப்பால் – களவியல், கற்பியல்

🏀இயற்பகுப்பை வள்ளுவர் செய்யவில்லை என்பாருண்டு. ஆனால் அதிகாரப்பகுப்பும், வைப்புமுறையும் வள்ளுவருடையவை.

🏀அறத்துப்பால் 38 அதிகாரங்கள், பொருட்பால் 70, காமத்துப்பால் 25 அதிகாரங்கள்.

🏀தமிழின் முதல் எழுத்தான அகரத்தில் தொடங்கி இறுதி எழுத்தாகிய னகரத்தில் முடிவது பாராட்டத்தக்கது.

🏀அறத்துப்பாலும், பொருட்பாலும் ஆசிரியர்கூற்றாக உள்ளன.

🏀காமத்துப் பால் ஆசிரியர் கூற்றாக இல்லாமல் அகப்பொருள் மாந்தர் கூற்றாக அமைந்துள்ளது.

🏀சங்க இலக்கியங்களிலும் இவ்வாறே புறப்பாடல்கள் ஆசிரியர் நேரேகிளத்தும் தன்னுணர்ச்சிப் பாடல்களாகவும் மாந்தர் கூற்றாக அமைந்துள்ளது.

🏀பொது உணர்ச்சிப் பாடல்களாகவும் விளங்குகின்ற இவ்வகையில் சங்கப்புற அக இலக்கியங்களும் திருக்குறளின் புற  அகப்பாடல்களாகிய குறள்களும் தமக்குள் ஒத்து நிற்பதை உணரமுடியும்.

🏀அறத்துப்பாலுக்கும் பொருட்பாலுகள் உரிய குறள்கள் அனைத்தும் செவியறிவுறூஉ. பொருள் மொழிக் காஞ்சி போன்ற புறத்துறைக்குள் அடங்கும்.

🏀திருக்குறளை அகப் புறம் பொருளிலக்கண நோக்கில் பகுத்து உரை எழுதாததால் சங்க இ. எதிரிடையாகத் தோன்றுகின்றன.

சிறந்த பகுதிகள்

🏀திருக்குறளில் அனைத்தும் சிறந்தவைதாம்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

உற்ற நோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை

அற்றே தவத்திற்கு உரு”  

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்

வாய்மை எனப்பாடுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்

அறத்தான் வருவதே இன்பம்

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைப்

பண்பும் பயனும் அது

அரம்போலும் கூர்மையரேனும் மரம்போல்வர்

மக்கட்பண் பில்லா தவர்

அறிவுடையார் எல்லாம் உடையார்

ஒழக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்

பண்புடையார்ப்பட்டுண்டு உலகம்

முயற்சி திருவினை ஆக்கும்

எழுதுங்கால் கோல் காணாக் கண்ணே போல் கொண்கன்

பழி காணேன்கண்ட விடத்து

நீங்கின் தெரூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்

தீயாண்டுப் பெற்றாள் இவள்

🏀திருக்குறளை நச்சினார்க்கினியர், ‘திருவள்ளுவப்பயன்’ எனக் குறிப்பிடுவார்.

🏀திருவள்ளுவர், என்றே சில ஓலைச் சுவடிகளில் திருக்குறள் சுட்டப்படுகிறது.

திருவள்ளுவரைச் சுட்டும் சிறப்புப் பெயர்கள்

🏀நூலும் நூலாசிரியரும் பல சிறப்புப் பெயர்களால் குறிக்கப்படுகின்றனர். நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர். நான்முகன், மாதானுபங்கி, செந்தாப் போதார். பெருநாவலர், பொய்யில் புலவன் முதலியன.

திருக்குறளைச் சுட்டும் சிறப்புப் பெயர்கள்

🏀திருக்குறளைச் சிறப்பிக்கும் பழம் பெயர்களாவன. முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ்மறை, பொதுமறை, திருவள்ளுவம் போன்றவை ஆகும்.

திருக்குறளின் பழைய உரையாசிரியர்கள்

🏀தருமர்,  மணக்குடவர்,  தாமத்தார்,  நச்சர், பரிமேலழகர், திருமலையர், மல்லர் பரிப்பொருமாள், காலிங்கர், வள்ளுவர் ஆகியோர் ஆவார்கள்.

 🏀இவற்றுள் ஐவர் உரையே கிடைத்துள்ளன. இவ்வுரைகளுள் பரிமேலழகர் உரையே சிறந்தது என்கிறார் மு.ராகவையங்கார்

🏀பிற்கால உரையாசிரியர்கள் இராமசாமி, மு.வ., வ.வே.சு. ஐயர் இராமானுச கவிராயர், பூரணலிங்கம் பிள்ளை, கா. அப்பாதுரை, திருக்குறள் முனுசாமி, கோ.வடிவேலுச் செட்டியார் முதலியோர். நூறுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்த்துள்ளார்கள்.  

🏀ஆங்கிலத்தில் மட்டும் 36 திருக்குறள் மொழிபெயர்ப்புகள் உள்ளன.

🏀எண்பதற்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

🏀இலத்தீன் – வீரமாமுனியர்

🏀ஆங்கிலம் – ஜி.யு. போப், வ.வே.சு ஐயர். தீட்சிதர், இராசாசி முதலியோர்

🏀ஜெர்மன் – டாக்டர் கிரால்

🏀பிரெஞ்சு – ஏரியல்

🏀உருசியா – யூரியரில் சோவ்

🏀இந்தி – அப்பாதீட்சிதர்

🏀தமிழுக்குக் கதி எனக் கம்பனையும் வள்ளுவத்தையும் குறிப்பிடுவர்.

🏀திருக்குறளில் 12000 சொற்கள் காணப்படுகின்றன.

🏀இவற்றில் வடசொற்கள் ஐம்பதிற்கும் குறைவானவை. ஏறத்தாழ அவை 0.4
விழுக்காடு மட்டுமே.

🏀திருக்குறள் ஓர் அறநூல்; அறிவியல் இலக்கியம்; உணர்விலக்கியம், குறிக்கோள் இலக்கியம். உலக அறநூல்களுள் தலைசிறந்தது ஆகும்.

மேற்கண்ட குறிப்புகள் தமிழ் இலக்கிய வரலாறு, க.கோ.வேங்கடராமன் என்கிற நூலில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியருக்கு மிக்க நன்றிகள்.

Leave a Reply

Translate »