குறிஞ்சிப்பாட்டு ஓர் அறிமுகம்

குறிஞ்சிப்பாட்டு

🏆ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவிப்பதற்காகக் கபிலர் பெருமானால் பாடப் பெற்றது.

🏆தமிழறிவித்தலாவது தமிழருக்கே உரிய அகத்திணைப் பண்பாட்டை உணர்த்துவதாகும்.

🏆இந்நூல் ஆசிரியப்பாவால் ஆகிய 261 அடிகளையுடையது.

🏆தோழி செவிலிக்கு அறத்தோடு நின்ற வழிக் கூறும் கூற்றாக அமைந்துள்ளது.

🏆அறத்தொடு நிற்றல் என்னும் அகத்துறையைச் சார்ந்த இது குறிஞ்சிக்குரிய முதல், கரு, உரிப்பொருள்களைக் கொண்டு விளங்குகிறது.

🏆நச்சினார்க்கினியரும், பரிமேலழகரும் இதனைப் பெருங்குறிஞ்சி என்று சிறப்பித்துரைப்பர்.

🏆நாடகப்பாங்கில் விறுவிறுப்பாக அமைந்துள்ள இந்நூலில் செங்காந்தள் முதல் மலை எருக்கு ஈறாக 99 வகை மலர்கள் அவற்றின் வண்ணமும், வனப்பும் புலப்பட  35 வரிகளில் குறிக்கப்பட்டுள்ளன.

🏆இதில் 30க்கும் மேற்பட்ட உவமைகள் இடம் பெறுள்ளன.

🏆தொல்காப்பியர் கூறியுள்ள தோழி அறத்தொடு நிற்றல் துறை ஏழனுள் ஆறுவகையினைக் கபிலரின் இப்பாட்டு உள்ளடக்கியுள்ளது.

🏆குறிஞ்சியின் ஒழுக்கமாகிய புணர்தலும் புணர்தல் நிமித்தமும் இதன்கண் அழகுற இடம் பெற்றுள்ளன.

🏆முதலில் இயற்கைப் புணர்ச்சியும், பின்னர் நிகழும் புணர்ச்சிகளுக்கு நிமித்தங்களும் கூறப்பட்டுள்ளன.

🏆பருவமடைந்த தலைமகள் உடல் மெலிவது கண்டு வருந்திய செவிலித்தாய்க்குத் தோழி அறத்தோடு நின்று உரைத்தல் ஆகும்.

🏆களிறுதரு புணர்ச்சி புனல்தரு புணர்ச்சி ஆகியன சொல்லப்பட்டுள்ளன.

🏆எளித்தல் ஏத்தல் எனவரும் அறத்தொடு நிற்கும் முறைமைகளில் பெரும்பாலானவையும் குறிஞ்சிப்பாட்டில் இடம்பெற்றுள்ளன.

🏆களவெனும் கைகோளுக்குரிய துறைகள் பலவற்றைத் தொகுத்துரைப்பதால், பின்னைய கோவை நூல்களுக்குக் குறிஞ்சிப்பாட்டு வழிகாட்டியது எனலாம்.

🏆மாலைக்கால வருணனை, மலைவளம், புனலாடல், பூக்கொய்தல் போன்றவை இப்பாடலில் சிறப்பிடம் பெறுவன.

முப்பது உவமைக்கு மேல் இப்பாட்டில் உள்ளன.

வினையிடை நின்ற சான்றோர் போல

என்பது அறத்தொடு நிற்கும் தன் நிலைக்குத் தோழி கூறும் உவமை,

முத்தினும் மணியினும் பொன்னினும், அத் துணை,

நேர்வரும் குரைய கலம் கெடின், புணரும்;

சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின்,

மாசு அறக் கழீஇ வயங்கு புகழ் நிறுத்தல்,

ஆக அறு காட்சி ஐயர்க்கும், அந் நிலை,

எளிய என்னார் தொல் மருங்கு அறிஞர்:

என்னும் அடிகள் ஒழுக்கத்தின் அருமைப்பாடு சுட்டுவன

குறிஞ்சிப்பாட்டு கதைச்சுருக்கம்

      மழையால் பெருகிய அருவி நீரில் நாங்கள் ஆடியும் பாடியும் மலர் பறித்துச் சூடியும் விளையாடிக் கொண்டிருந்தோம். அவ்வமயம் ஆங்கு வில்லும் அம்பும் எந்தி வேட்டை நாய்கள் சூழ கட்டிளங்காளை ஒருவன் வந்தனன். நாயினைக் கண்டு நடுங்கிய நாங்கள் அங்கிருந்து அகல முயலுகையில் வேடர்களால் துரத்தப்பட்ட வேழம் ஒன்று எம்மை நோக்கி விரைந்து வரக் கண்டு அச்சத்தால் நடுங்கினோம். நாங்கள் நாணம் துறந்து அக்காளையின் அருகே சென்று நின்றன.

      அருளுடைய அவ்விளைஞன் களிறெறிந்து எம்மைக் காத்தனன். பின்னர்த் தலைவியின் நலன் பாராட்டி உன்னை என் இல்லக்கிழத்தியாக ஏற்றுக் சேர்த்துவிட்டு மறைந்தனன். நற்குடிப் பிறந்தவனும், நல்லொழுக்கம் மிக்கவனுமாகிய அந்நல்லோன் நாள்தவறாது நள்ளிரவாயினும் வந்து தலைவியைச் சந்தித்துச் செல்கிறான். எவ்வளவுதான் வீரமுடையவனேனும் அச்சம்தரும் காட்டுவழியில் பெருகிவரும் ஆற்றினைக் கொள்வேன் என்று மலையுறை தெய்வத்தின் முன்னிலையில் உறுதி கூறி, அருவி நீரை அள்ளி அருந்தி ஆணையிட்டான்.

இதற்குள் மாலைக் வந்துவிடவே எம்மைப் பாதுகாவலொடு ஊர்ப்புறத்தே காலம்கடந்து இரவு நேரத்தில் வருவது தலைவிக்குத் துன்பம் தருகின்றது. இதுவே இவளது மெலிவிற்குக் காரணம் என்று தோழி செவிலியிடம் நாகரிகமாகச் சொல்லுகிறாள்.

இந்நிகழ்ச்சிகளின் ஊடே இடம் பெற்றுள்ள மாலைக்கால வருணனையும், தலைவனது மலைவளம் கூறுதலும், தலைவி தோழியருடன் புனலாடி மகிழ்ந்திருந்ததும், பல்வகைப் பூக்களையும் கொய்து களித்ததும் ஆகிய செய்திகள் சிறப்பாக வருணிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Translate »