பெரும்பாணாற்றுப்படைசிறப்புகள்
🎯இந்நூல் 500 அடிகளை உடையது.
🎯காஞ்சி மாநகரத்தில் அரசு செலுத்திய இளந்திரையனைக் தொண்டைமான் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது.
🎯இப்பாட்டைப் “பாணாறு” எனவும் வழங்குவர்.
🎯பரிசில் பெறவிருக்கும் பெரும் பாணனைப் பரிசில் பெற்ற பாணன், தொண்டைமான் இளந்திரையனிடம் ஆற்றுப்படுத்தியது.
🎯வென்வேற் கிள்ளி என்னும் சோழ மன்னனுக்கும் பீலிவளை எனும் நாககன்னிக்கும் பிறந்தவனே இளந்திரையன் என மணிமேகலை கூறும்.
🎯காஞ்சி இவன் தலைநகர்.
“இடனுடைப் பேரியாழ் முறையுளிக் கழிப்பி“
என்ற தொடர் இடம் பெறலாலும், மிக்க அடிகளைப் பெற்றிருப்பதாலும். பெரும்பாண் குடியினரை ஆற்றுப்படுத்தியதாலும் இது பெரும்பாணாற்றுப்படை எனப்பட்டது.
🎯ரா.ராகவையங்கார் இதற்கு ஆய்வுரை வழங்கியுள்ளார்.
🎯யாழ் வருணனை, ஐந்நிலத்தார் ஒழுகலாறுகள், அந்தணர் அருங்கடன் இறுத்தல், கொற்றவையிடம் பேய்கள் தம்பசி கூறல், முனிவர் மொழிவழி விலங்குகள் ஏவல் கேட்டல், வாணிக மகளிர் உப்புப்பார வண்டி ஓட்டல், கழுதை மேல் வணிகர் மிளகுபொதி கொண்டேகல், கலங்கரை விளக்கச் சிறப்பு, எயின் குடியிருப்பு, காஞ்சியில் சமய விழாக்கள், இயற்கைக் காட்சிகள், ஆயர் பண்ட மாற்றுச் செய்தல், நாய் கொண்டு முயல் வேட்டையாடல் போன்ற செய்திகள் இடம் பெற்றுள்ளன.
🎯இளந்திரையனின் கொடை, வீரம், செங்கோற் சிறப்பு, விருந்தோம்பல் போன்றவையும் மகளிர் கழங்கும் பந்தும் ஆடுதல். நெல்லரிசி கொண்டு மதுத் தயாரித்தல், பொன்னைக் கல்லில் உரைத்து மாற்று அறிதல் போன்ற செய்திகளும் இப்பாட்டில் விளக்கப்பட்டுள்ளன.
🎯கனலி (சூரியன்) ஞெகி (தீக்கடைகோல்) வல்சி (உணவு) போன்ற அரிய சொற்கள் இந்நூலில் காணப்படுகின்றன.
🎯இதனைத் தமிழண்ணல் ”சமுதாயப்பாட்டு” எனச் சுட்டுவார்.
🎯உருத்திரங்கண்ணனார் இயற்கை காட்சிகளில் ஈடுபாடு மிக்கவர்,
🎯தொண்டைமான் நாட்டில் ஆறலைக் கள்வர்களும் தீய விலங்குகளும் இல்லை; இடியும் துன்புறுத்தாது என்றும் கடற்கரைப் பட்டினத்தில் மேற்றிசைக் குதிரைகள் வந்து இறங்கி இருக்கும்.
🎯புறநாட்டு வணிகச் சிறப்பும் பேசப்படுகின்றது,
🎯நானிலங்களின் வருணனை அழகுடன் திகழ்கின்றது.
🎯நாய் கொண்டு முயல் வேட்டையாடுதல், செய்திகளை இந்நூலில் காணலாம்.
🎯பசுக்களைப் பாதுகாத்து பால், தயிர் விற்று நெல்லும் புல்லும் பண்டமாற்றமாகப் பெறுதல் போன்ற செய்திகளை இந்நூலில் காணலாம்.
🎯திரையனது நட்பினை விரும்பியப் பலர், மலையிலுள்ள பொருள்களைக் கவர்ந்து கொண்டு கடலை நோக்கி வரும் ஆற்றினைப் போல பலவகைப் பொருட்களைச் சுமந்து கொண்டு வந்து, கங்கையாற்றின் கரையில் மறுகரை அடைவதற்காகத் தோணியின் வரவை எதிர்பார்த்து ஒருவரை, ஒருவர் முந்துவது போல நின்றார்கள் என்று காஞ்சி நகர்க் காவலன் பெருமையை உருத்திரங்கண்ணனார் இளந்திரையன் பாடுகின்றார்.
”பழுமரம் தேடும் பறவை போலக்
கல்லென் சுற்றபொடு கால்கிளர்ந்து திரிதரும்
புல்லென் யாக்கைப் புலவுவாய்ப் பாண” – பாணர் பற்றி
அல்லது கடிந்த அறம்புரி செங்கோல்
பல்வேல் திரையன் – இளந்திரையன் பற்றி

