தற்குறிப்பேற்ற அணி

தற்குறிப்பேற்ற அணி இலக்கணம்

தன்+குறிப்பு+ஏற்றுதல் = தற்குறிப்பேற்றம். உலகத்தில் இயல்பாக நடக்கின்ற ஒரு நிகழ்வுக்கு ஆசிரியர் தன்னுடைய கற்பனையை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும். தற்குறிப்பேற்ற அணியானது இரண்டு வகையாகக் குறிக்கலாம். அவை, 01)பெயர் பொருள் தற்குறிப்பேற்றம் 02)பெயராப்பொருள் தற்குறிப்பேற்றம் உதாரணம் : 1                       “மண்படுதோட் கிள்ளி மதயானை மாற்றரசர்             வெண்குடையைத் தேய்த்து வெகுளியால் – விண்படர்ந்து             பாயுங்கொல் என்று பனிமதியம் போல்வதூஉம்             தேயும் தெளிவிசும்பி னின்று”…

Read More
மதுரைக்காஞ்சி

மதுரைக்காஞ்சி நூல் குறிப்புகள்

🏀பத்துப்பாட்டு நூல்களிலேயே பெரிய பாடலான 782 அடிகள் கொண்டது. 🏀பெருகுவள மதுரைக்காஞ்சி என்று சிறப்பிக்கப்படும் இந்நூல் வஞ்சி அடிகள் விரவி வந்த ஆசிரியப்பாவால் இயன்றது.   🏀 ‘கூடற்றமிழ்‘ என்ற பெயரும் “காஞ்சிப்பாட்டு” என்றும் சிறப்புப் பெயர்களைப் பெறும். 🏀இங்குக் காஞ்சித்திணை என்பது புறப்பொருள் வெண்பாமாலைப் பொருளைச் சுட்டாது தொல்காப்பியத்தின் நிலையாமைப் பொருளைக் குறிப்பிடும். 🏀மதுரையை ஆட்சிபுரிந்து வந்த தலையாலங்கானத்துச்செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியனை மாங்குடி மருதனார் பாடியது. 🏀பொருட்செல்வம், இளமை, யாக்கை போன்ற உலக இன்பங்கள்…

Read More
நெடுநல்வாடை

நெடுநல்வாடை குறிப்பு வரைக

🏀நெடுநல்வாடையின் ஆசிரியர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஆவார். 🏀நெடுநல்வாடை தலைவனாகத் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் உள்ளான். 🏀188 அடிகளில் நேரிசை ஆசிரியப்பாவில் அமைந்துள்ள இந்நூல். 🏀 ஒரு அகப்பொருள் பாடலாகவே விளங்குகின்றது. 🏀 அரசனைப் பிரிந்து வருந்தும் அரசமாதேவியின் துன்பம் நீங்குமாறு ‘பகைவரை வென்று வேந்தன் விரைவில் வருவானாக’ என்று கொற்றவையைப் பாடுவதாக இந்நூல் அமைந்துள்ளது. 🏀 நெடுமை + நன்மை + வாடை = நெடுநல்வாடை ஆகும். 🏀 தலைவன் போர்மேல் செல்லுதற்குரிய…

Read More
பட்டினப்பாலை குறிப்புகள்

பட்டினப்பாலை குறிப்புகள்

🌷பாலைத்திணையையும், காவிரிப்பூம்பட்டினத்தின் வளத்தையும் ஒருங்கே உரைப்பதால் பட்டினப்பாலை என்று பெயர் பெற்றது. 🌷பெரும்பாணாற்றுப்படை இயற்றிய கடியலூர் உருத்திரங்கண்ணனாரே இதன் ஆசிரியர் ஆவார். 🌷இஃது அகப்பொருட் பாலைத்திணைக்கு உரியது. 🌷301 அடிகள் ஆன இந்நூலில் 138 அடிகள் ஆசிரியப் பாவினாலும், 163 அடிகள் வஞ்சிப்பாவினாலும் ஆகியமையின் இதனை ‘வஞ்சி நெடும்பாட்டு‘ என்றும் ‘பாலைப் பாட்டு‘ என்றும்  வழங்குவர். 🌷அகப்பொருள் மாபின்படி இதில் தலைவன் பெயர் குறிப்பிடப்படவில்லை. 🌷இதற்கு உரை எழுதியவர் நச்சினார்க்கினியர் ஆவார். 🌷’பொருநாறுபாலை கரிகால்’ என்று பாடப்பட்டோரின்…

Read More
முல்லைப்பாட்டுக் குறிப்புகள்

முல்லைப்பாட்டுக் குறிப்புகள்

🌷பத்துப்பாட்டில் மிகக் குறைந்த அடியளவுடைய சிறிய பாடல் இதுவே 103 அடிகளைக் கொண்டு நேரிசை ஆசிரியப் பாவால் ஆகிய நூல். 🌷முல்லைத் திணைக்குரிய இருத்தல் ஒழுக்கத்தைச் சிறப்பித்துக் கூறுகின்றது. 🌷அகத்திணைகளுள் ஒன்றான முல்லை, வினைமேல் சென்ற தலைவன் திரும்பி வரும் வரை தலைவி பிரிவுத்துயரை ஆற்றியிருத்தலை உரிப் பொருளாகக்  கொண்டது. 🌷இதனை நச்சர் எனும் ஆசிரியர் இல்லறம் நிகழ்த்துதற்குப் பிரிந்து வருந்துணையும் ஆற்றியிரு வென்று கணவன் கூறிய சொல்லைப் பிழையாது ஆற்றிமிருந்து இல்லறம் நிகழ்த்திய இயற்கை’ என்று…

Read More
குறிஞ்சிப்பாட்டு

குறிஞ்சிப்பாட்டு ஓர் அறிமுகம்

🏆ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவிப்பதற்காகக் கபிலர் பெருமானால் பாடப் பெற்றது. 🏆தமிழறிவித்தலாவது தமிழருக்கே உரிய அகத்திணைப் பண்பாட்டை உணர்த்துவதாகும். 🏆இந்நூல் ஆசிரியப்பாவால் ஆகிய 261 அடிகளையுடையது. 🏆தோழி செவிலிக்கு அறத்தோடு நின்ற வழிக் கூறும் கூற்றாக அமைந்துள்ளது. 🏆அறத்தொடு நிற்றல் என்னும் அகத்துறையைச் சார்ந்த இது குறிஞ்சிக்குரிய முதல், கரு, உரிப்பொருள்களைக் கொண்டு விளங்குகிறது. 🏆நச்சினார்க்கினியரும், பரிமேலழகரும் இதனைப் பெருங்குறிஞ்சி என்று சிறப்பித்துரைப்பர். 🏆நாடகப்பாங்கில் விறுவிறுப்பாக அமைந்துள்ள இந்நூலில் செங்காந்தள் முதல் மலை எருக்கு ஈறாக…

Read More
tnpsctime-பொருநர் ஆற்றுப்படை

பொருநராற்றுப்படை சிறப்புகள்

🎯 இந்நூல் 248 அடிகளை உடையது.
 🎯பொருநர் என்பதற்கு, மற்றொருவர் போல் வேடம் கொள்வோர் என்பது பொருள்
 🎯இவர்கள் ஏர்க்களம் பாடுவோர் போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் என வகைப்படுவர்.
 🎯பொருநர் என்பவர் –  வீரர் அல்லது மறவர் போல் வடிவம் பூணுவோர்.
 🎯இப்பாட்டில் பொருநர் என்பது போர்க்களம் பாடுவோரைக் குறிப்பதாகும்.
 🎯பரிசில் பெறக் கருகிய ஒரு பொருநனைப் பரிசில் பெற்ற ஒரு பொருநன் ஆற்றுப்படுத்துகின்றான்.
 🎯இதன் ஆசிரியர் முடத்தாமக் கண்ணியார் ஆவார்.
 🎯இதன் பாட்டுடைத் தலைவன்…

Read More
சிறுபாணாற்றுப்படை

சிறுபாணாற்றுப்படை நூல் குறிப்புகள்

🎯பண்பாடுவோர் பாணராவர்
 🎯பாணர்கள் – இசைப்பாணர், யாழ்ப்பாணர், பிச்சை ஏற்றுப் பிழைக்கும் மண்டைப்பாணர் என மூவகைப்படுவர்.
 🎯சிறிய யாழை வாசிப்போரைச் சிறுபாணர் என்றும், பெரிய யாழை வாசிப்போரைப் பெரும்பாணர் என்றும் பாகுபடுத்துவர்.
 🎯இது யாழ்ப்பாணருள் சிறுபாணரை ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது.
 🎯இந்நூல் 269 அடிகளை உடையது. பாணாற்றுப்படை நூல்களுள் அடி அளவால் சிறிதாக உள்ளது.
 🎯பரிசு பெற்ற பாணன் பரிசில் பெறவிருக்கும் பாணனை ஓய்மாநாட்டு நல்லியக்கோடனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது.
 🎯இப்பாடல், ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது.
 🎯இதனைச் “சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப் படை”…

Read More
பெரும்பாணாற்றுப்படை

பெரும்பாணாற்றுப்படைசிறப்புகள்

🎯இந்நூல் 500 அடிகளை உடையது.
 🎯காஞ்சி மாநகரத்தில் அரசு செலுத்திய இளந்திரையனைக் தொண்டைமான் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது.
 🎯இப்பாட்டைப் “பாணாறு” எனவும் வழங்குவர்.
 🎯பரிசில் பெறவிருக்கும் பெரும் பாணனைப் பரிசில் பெற்ற பாணன், தொண்டைமான் இளந்திரையனிடம் ஆற்றுப்படுத்தியது.
 🎯வென்வேற் கிள்ளி என்னும் சோழ மன்னனுக்கும் பீலிவளை எனும் நாககன்னிக்கும் பிறந்தவனே இளந்திரையன் என மணிமேகலை கூறும்.
 🎯காஞ்சி இவன் தலைநகர்.
 “இடனுடைப் பேரியாழ் முறையுளிக் கழிப்பி“
                   என்ற தொடர் இடம் பெறலாலும், மிக்க…

Read More
Translate »