முல்லைப்பாட்டுக் குறிப்புகள்

முல்லைப்பாட்டுக் குறிப்புகள்

🌷பத்துப்பாட்டில் மிகக் குறைந்த அடியளவுடைய சிறிய பாடல் இதுவே 103 அடிகளைக் கொண்டு நேரிசை ஆசிரியப் பாவால் ஆகிய நூல்.

🌷முல்லைத் திணைக்குரிய இருத்தல் ஒழுக்கத்தைச் சிறப்பித்துக் கூறுகின்றது.

🌷அகத்திணைகளுள் ஒன்றான முல்லை, வினைமேல் சென்ற தலைவன் திரும்பி வரும் வரை தலைவி பிரிவுத்துயரை ஆற்றியிருத்தலை உரிப் பொருளாகக்  கொண்டது.

🌷இதனை நச்சர் எனும் ஆசிரியர் இல்லறம் நிகழ்த்துதற்குப் பிரிந்து வருந்துணையும் ஆற்றியிரு வென்று கணவன் கூறிய சொல்லைப் பிழையாது ஆற்றிமிருந்து இல்லறம் நிகழ்த்திய இயற்கை’ என்று இயம்புவர்.

🌷இதன் ஆசிரியர் காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் ஆவார்.

🌷இதற்குப் பாட்டுடைத்தலைவர் பெயர் குறிப்பிடப்படவில்லை.

🌷சிலர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைத் தலைவனாகக் கொள்வர். முல்லைத் திணைப்பாடல்களில் இது நுட்பமும் நயமும் சான்றது.

🌷முல்லைத்திணைக்கு உரியதாகும் இவ்வகைப்பாடல். முல்லைக்குப் புறனான வஞ்சியையும் இணைத்துக் கூறும்.

🌷போர்மேற் சென்ற தலைவன் திரும்பும்வரை தலைவி காத்திருத்தமை கூறுதலால் இது காத்திருத்தலாகிய முல்லை உரிப்பொருளைக் குறிப்பதாயிற்று.

🌷அரசனின் பாசறை இருப்பு, முல்லை நிலஇயல்பு ஆகியன சிறப்புறக் கூறப்பட்டுள்ளன.

🌷முல்லைக்குரிய காரும் மாலையுமாகிய பொழுதுகள் வருணிக்கப்பட்டுள்ளன.

🌷அடி அளவால் சிறியதாயினும் சுவைச் சிறப்பால் பெருமையுடைய இந்நூல்

🌷முல்லைத் திணைக்குரிய பெரும் பொழுதான கார்காலம், சிறுபொழுதான மாலைக்காலம், ஆகிய இரு பொழுதுகளையும் அழகுறக்கூறும் பகுதியுடன் பாடலைத் தொடங்குகிறது.

🌷முதல் 23 அடிகள் வரையிலும் தலைவியின் பிரிவுத்துயர் உரைக்கப் பட்டுள்ளது

🌷அடுத்த 55 அடிகள் வரையிலும் அரசனின் பாசறை அமைப்பும் பாசறையில் தலைவனிருப்பும் ஓவியக் காட்சி நல்குகின்றன.

🌷இதில் மன்னனின் பாசறையில் இடுப்பில் வாளும் வளைக் கரத்தில் விளக்கும் ஏந்தி அவ்விளக்கை அணையாது பாதுகாக்கும் பெண்டிரும், பாசறை வேந்தனுக்குப் பாதுகாவலாய் பெருமூதாளரும், யவனரும் மிலேச்சரும் இருந்த செய்தி சொல்லப்பட்டுள்ளது.

🌷அடுத்துப் பத்து அடிகளில் தலைவியின் அவலநிலை காட்டப்பட்டுள்ளது.

🌷இறுதியில் முல்லை நிலத்தின் இயல்பும், தலைவன் நிலையும், கார் காலத்திற்குப் பிறகு கூதிர்காலத்தில் அவன் திரும்புதலும், திரும்பும்போது தேர்க் குதிரைகளின் கழுத்துமணி ஒலித்தலும் உரைக்கப்பட்டுள்ளன.

🌷தலைவி நெஞ்சை ஆற்றி இருப்பதாலும் நெஞ்சாற்றுப்படுத்த’ என்ற தொடரினாலும் இதனை நெஞ்சாற்றுப்படை என்றும் கூறுவதுண்டு.

செறியிலைக் காயா அஞ்சனம் மலர

முறியிணர்க் கொன்றை நன்பொன் கால

கோடல் குவிமுகை அங்கை அவிழத்

தோடார் தோன்றி குருதி பூப்ப”  (93-96)

மைபோல் காயாம்பூவும் பொன்போல் கொன்றையும் உள்ளங்கைபோல் வெண்காந்தள் மொட்டுக்கள் விரிய தோன்றிப் பூக்கள் குருதிபோல் மலர மரங்கள் அடர்ந்து காணப்படும். பிணையோடு தோன்றிற்று இக்கான் வழியில் மான்கள் தம் இணைந்து விளையாடக் கார்காலம் என்று கூறும் கழிபேருவகை அளிப்பதாக உள்ளது.

🌷வருணனைப் பகுதி இந்நூலிலிருந்து – யவனர் இயற்றிய புலித் தொடர் சங்கிலியும், பாவை விளக்கும், உடம்பின் உரைக்கும் உரையாநாவின் படம்புகு மிலேச்சர்களும், நாழிகை வட்டில் கொண்டு நாழிகை அறியும் பழக்கமும், நாழிகையைக் கணக்கிட்டு உரைக்கும் நாழிகைக் கணக்கரும் பற்றிய குறிப்புகளும், பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்கும் பழக்கமும் நெல்லையும் மலரையும் கோயிலுக்குக் கொண்டு செல்லும் வழக்கமும் யானைகளைப் பழக்கும் விதமும், யானைகளை சொற்களால் பழக்கினர் என்பதும், வட மகளிரும் போர்க்களம் சென்றனர் என்பனவும் போன்ற பல அரிய செய்திகள் அறியலாகின்றன.

🌷நூலின் இடையே அகத்திணையான முல்லைக்குத் தொடர்பான புறவொழுக்கமாகிய வஞ்சியும் உரைக்கப்பட்டுள்ளது. இதற்கு மறைமலையடிகள் அரிய ஆராய்ச்சியுரை ஒன்றும் இயற்றியுள்ளார்.

🌷யவனர் செய்த புலித்தொடர்ச் சங்கிலியும் பாவைவிளக்கும் கூறப்பட்டுள்ளன.

கானம் நந்திய செந்நிலப் பெருவழி

என்பது முல்லை வழி சுட்டியது.

மெய்ப்பை புக்க வெருவருந் தோற்றத்து

வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்

உடம்பின் உரைக்கும் உரையாநாவின்

படம்புகு மிலேச்சர்

ஆகியவை யவனர் பற்றியன.

செறியிலைக் காயா அஞ்சனம் மலா

முறியிளார்க் கொன்றை நன்பொன் கால

கோடல் குவிமுகை அங்கை அவிழத்

தோடார் தோன்றி குருதிபூப்ப

என்பது கார்கால மலர்ச்சியைக் காட்டியது. மறைமலையடிகள் இப்பாட்டிற்கு ஆராய்ச்சியுரை எழுதியுள்ளார்.

 

Leave a Reply

Translate »