பத்துப்பாட்டு நூல்கள் விளக்கம்
🏀’பாட்டும் தொகையும்’ எனும் போது, பாட்டு என்பது பத்துப்பாட்டைக் குறிக்கும்.
🏀 “மூத்தோர்கள் பாடியருள் பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும்’ என்று தமிழ்விடுதூது இதனைப் புகழும்.
🏀 பத்துப்பாட்டிலுள்ள பாடல்களைப்பா என்றும் பாட்டு என்றும் சுட்டுவர்.
🏀 பத்துப்பாட்டு என்பது நூறு அல்லது நூற்றின்மிக்க அடிகளால் ஆகிய பத்துத் தனித்தனி நூல்களைக் கொண்ட ஒரு தொகுப்பாகும்.
🏀 இஃது அகவற்பாக்களால் அமைந்த பத்துப்பாடல்களின் கோவையாகும்.
நூறடிச் சிறுமை நூற்றுப் பத்தளவே
ஏறிய அடியின் ஈரைம்பாட்டு
தொடுப்பது பத்துப் பாட்டெனப்படுமே (பன்னிரு பாட்டியல் 266-7)
‘முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகுவள மதுரைக் காஞ்சி – மருவினிய
கோல நெடுநல் வாடை கோல் குறிஞ்சிப்பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து’
என்ற பழம்பாடல், பத்துப் பாட்டு நூல்கள் எவை என்பதை மிகத் தெளிவாகக் காட்டுகின்றது.
பத்துப்பாட்டுக்களாவன :
திருமுருகாற்றுப்படை
பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு
மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை
குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை
மலைபடுகடாம்
🏀 பத்துப்பாட்டில் அகப்பொருளில் அமைவன 4 : அவை முல்லைப் பாட்டு, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை.
🏀 புறப்பொருளில் அமைவன 6 : திருமுருகாற்றுப் படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை மலைபடுகடாம், மதுரைக்காஞ்சி,
🏀 பல அடிகள் கொண்ட நீண்ட பாட்டுக்கள் உள்ளன.
🏀 அடிச்சிறுமை 103 அடி: (முல்லைப்பாட்டு)
🏀 அடிப் பெருமை 782. (மதுரைக்காஞ்சி)
🏀 இந்நூல் பொருட்கிசைந்த கற்பனைகளைக் கொண்டது.
🏀 இவற்றுள் ஐந்து நூல்கள் ஆற்றுப்படை நூல்களாம்.
🏀 முல்லைப்பாட்டு குறிஞ்சிப்பாட்டு, பட்டினப் பாலை, அகஞ்சார்ந்தவை.
🏀 மதுரைக் காஞ்சி நிலையாமை கூறும் புறப்பாட்டாகும்.
🏀 பத்துப்பாட்டில் வஞ்சியடி பயிலும். பட்டினப்பாலை தவிர்ந்த ஒன்பதும் ஆசிரியப்பாவால் இயன்றன.
🏀 ஒவ்வொரு பாடலின் ஈற்றிலும் அமைந்துள்ள வெண்பாக்களின் மொத்தத்தொகை 24.
🏀 நெடுநல்வாடை, அகப்பொருட் செய்தி கொண்டதாம். பாண்டியனது அடையாளப் பூவாகிய வேம்பைக் கூறினமையால் இதனைப் புறப்பொருள் பற்றிய நூல் என்பர்.
🏀 “தீயின் அள்ள ஒண் செங் காந்தள்” என மலைபடுகடாத்துள் வரும் அடிக்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையால் சங்கப்புலவர்களே இதனைத் தொகுத்தவர் என அறிய முடிகிறது.
🏀 பத்துப்பாட்டு எனும் தொகுப்பு 13ஆம் நூற்றாண்டின் பின்னரே தோன்றியிருக்க வேண்டும் என்ற கருத்தும் நிலவுகிறது.
🏀 இக்கருத்திற்கு இறையனார் அகப்பொருளுரையில் பத்துப்பாட்டு கடைச்சங்க நூலாகக் குறிப்பிடப்பிட்டுள்ளார்.
🏀 இளம்பூரணர் ஒவ்வொரு பாட்டையும் தனியாகக் குறிப்பிடாமலும் தொகுதியாகச் சுட்டாமலும் 13ஆம் நூற்றாண்டினரான பேராசிரியர் பாட்டு என்றும் மயிலைநாதர் பத்துப்பாட்டு என்றும் குறிப்பிடுகிறார்.
🏀 இவ்வரிய தொகுப்பு நூலுக்கு, உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார். இவ்வுரையினால், இவ்வுரைக்கு முன்பும் மற்றுமோர் உரை இருந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது.
🏀 பட்டினப்பாலை, முல்லைப் பாட்டு ஆகியவற்றிற்கு மறைமலையடிகள் ஆராய்ச்சியுரை வழங்கியுள்ளார்.
🏀 பத்துப்பாட்டு அகம், புறம் எனும் இரு திணைகளிலும் பாடப்பட்டுள்ளது.
🏀 முருகக்கடவுள் உள்ளிட்ட ஏழு தலைவர்கள் மீது எட்டு புலவர்களால் பாடப்பட்டுள்ள 10 பாடல்களின் தொகுப்பாகிய இப்பத்துப் பாட்டு நூல்கள் ஆகும். 🏀 இப்பத்துப் பாட்டு நூலில் உள்ள பாடல்கள் பாட்டு எனவும் வழங்கப் பெறும்.
🏀 “சான்றோர் உரைத்த தண்டமிழ்த் தெரியல், ஒருபது பாட்டும்” என்று நச்சினார்க்கினியர் உரைச் சிறப்புப் பாயிரத்தாலும்,
🏀 பேராசிரியரைப் போன்ற உரையாசிரியர்கள், “பாட்டிலும், தொகையினும் வருமாறு கண்டு கொள்க” என்று குறிப்பிடுமிடத்தில், பத்துப் பாட்டினை முன்வைத்துக் கூறுவதாலும் “மூத்தோர்கள் பாடியருள் பத்துப் பாட்டும், எட்டுத் தொகையும்” என்ற தமிழ் விடு தூது அடிகளாலும் இந்நூலின் சிறப்பை உணரலாம்.
🏀 பத்துப்பாட்டு முழுமைக்கும் நச்சினார்க்கினியர் உரை வகுத்துள்ளார். இது முழுமையும் கிடைத்துள்ளது பெரும் சிறப்பாகும்.
🏀 இதனை டாக்டர் உவேசா. அவர்கள் பதிப்பித்துப் பெருமை சேர்த்துப் பெருந்தொண்டாற்றியுள்ளார்.
🏀 பத்துப்பாட்டில் இயற்கைக்கு முரண்பட்ட கற்பனைகளோ பொருந்தா உவமைகளோ காணப் பெறவில்லை.
🏀 பண்டைத் தமிழர் வாழ்க்கையை உள்ளபடி காட்டும் காலக் கண்ணாடியாக இந்நூல் விளங்குகின்றது.
பத்துப்பாட்டில் ஆற்றுப்படை நூல்கள்
🏀 ஆற்றுப்படை பரிசில் பெறும் கலைஞரின் பெயரால் பெயர்பெறும். பொருத்தமற்ற கற்பனைகளோ. பொருளற்ற உவமைகளோ, பத்துப் பாட்டில் காணவியலா. ஆற்றுப்படை நூல்கள் நடப்பியலை ஒட்டி நடப்பது. இயற்கை வழியது தமிழர் நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் ஒளியூட்டுவது ஆகும்.
கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறார்க்கு அறிவுறீஇச்
சென்றுபயன் எதிரச் சொன்ன பக்கமும் (தொல்காப்பியம், புறத்திணையியல் )
🏀 ஆற்றுப்படை – ஆறு என்னும் சொல்லுக்கு வழி அல்லது நெறி என்பது பொருளாகும்.
🏀 ஆற்றுப்படுத்துதல் என்றால் அறிந்தானொருவன் அறியாதான் ஒருவனை வழிப் படுத்தலாகும்.
🏀 பரிசில் பெற்ற கலைஞர் ஒருவர். எதிர்ப்பட்ட கலைஞர்களைத் தமக்குப் பரிசில் ஈந்த வள்ளலிடம் செல்லுமாறு வழிப்படுத்துவது.
🏀 பழுமரம் நாடிச் செல்லும் பறவைகள் போல், வள்ளல்களை நாடிப் பரிசில் பெற்று மகிழ்வோடு திரும்பிய பாணரும், கூத்தரும், பொருநரும். விறலியரும், தம்மையொத்த கலைஞர்கள் எதிர்ப்பட்டபோது, அன்னோரும் தாம் பெற்ற இன்பத்தைப் பெறவேண்டு மென்று விழைத்து தமக்குப் பரிசில் நல்கிய வள்ளல்களை அடைவதற்குரிய வழியையும், பாராட்ட வேண்டிய முறைகளையும் அவர் பரிசில் நல்கும் பான்மையினையும், பிற செய்திகளையும் எடுத்துக் கூறுவது வழக்கம்.
🏀 புறநானூற்றிலும், பதிற்றுப்பத்திலும் சில ஆற்றுப்படைப் பாடல்கள் குறைந்த அடிகளுடன் வருகின்றன. வேறு எங்கும் ஆற்றுப்படை என்னும் இலக்கிய மரபினை வேறு எம்மொழி இலக்கியத்திலும் காண இயலாது.
🏀 மிக்க அடிகளால் வரும் ஐந்து ஆற்றுப்படைப் பாக்களைப் பத்துப்பாட்டில் அமைத்துள்ளனர்
🏀 ஆற்றுப்படையின் எதிரொலிகளைப் பிற்காலத்தைச் சார்ந்த கலம்பகம் தனிப்பாடல்கள் புலவராற்றுப்படை, திருத்தணிகையாற்றுப்படை திருப்பாணாற்றுப்படை முதலியவற்றில் காணமுடியும்.
🏀 இதனைத் தனி இலக்கிய வகையாய்ப் பாட்டியல் நூல்கள் குறிப்பிடும்.
🏀 வாழ்க்கையில் இருந்து முகிழ்ப்பதே உண்மையான இலக்கியம் என்பதற்கேற்ப அந்நாட் கலைஞர்தம் வாழ்க்கையினின்றும் முகிழ்த்தது இவ்வாற்றுப்படை இலக்கியமாகும்.
🏀 கலைஞர்தம் வாழ்க்கையின் இவ்வியல்பினைக் கற்றுவல்ல புலவர் பெருமக்கள், தாம்பாராட்ட விரும்பிய அரசரையும் வள்ளல்களையும் பாராட்டத்தக்கதோர் உத்தியாகக் கொண்டனர்.
🏀 இவ்வாறு பாடாண் திணையின் கூறுபாடுகளில் ஒன்றாக ஆற்றுப்படை அமைவதாயிற்று.
🏀 இச்செய்யுள் வகையானது, பிற்காலத்தில் ஒரு சிற்றிலக்கிய வகையாக உருப் பெற்றதைப் பாட்டியல் நூல்களில் இதற்கு இடம் கொடுத்திருப்பது கொண்டு உணரலாம். புறநானூற்றிலும், பதிற்றுப்பத்திலும் பல செய்யுட்கள் ஆற்றுப்படைகளாக அமைத்துள்ளன. எனினும் அவை 5 முதல் 371 அடிகட்குள் அமைந்த சிறிய பாடல்களேயாகும்.
🏀 பத்துப்பாட்டிலமைந்த ஆற்றுப்படைகளோ, நூற்றுக்கணக்கான அடிகளைக் கொண்டு விளங்குகின்றன. இவற்றுன் மிகப்பெரிதான மலைபடுகடாம். அடிகளைக் கொண்டு விளங்குகின்றது.
| பொருள் | பாட்டு | பாடிய புலவர் | பாட்டுடைத் தலைவன் | அடி வரையறை |
| ஆற்றுப்படை | திருமுருகாற்றுப்படை | நக்கீரர் | முருகக் கடவுள் | 317 |
| பொருநராற் றுப்படை | முடத்தாமக் கண்ணியார் | கரிகாலன் | 248 | |
| சிறுபாணாற் றுப்படை | நத்தத்தனார் | நல்லியக்கோடன் | 269 | |
| பெரும்பாணாற்றுப்படை | உருத்திர கண்ணனார் | இளந்திரையன் | 500 | |
| மலைபடு கடாம் (கூத்தராற்றுப் படை) | பெருங் கௌசிகனார் | நன்னன்சேய் நன்னன் | 583 | |
| அகம் | குறிஞ்சிப்பாட்டு | கபிலர் | ஆரிய அரசன் பிரகதத்தன் | 261 |
| முல்லைப்பாட்டு | நப்பூதனார் | நெடுஞ்செழியன் | 103 | |
| பட்டினப்பாலை | உருத்திர கண்ணனார் | கரிகாலன் | 301 | |
| புறம் | நெடுநல்வாடை | நக்கீரர் | நெடுஞ்செழியன் | 188 |
| மதுரைக்காஞ்சி | மாங்குடி மருதனார் | நெடுஞ்செழியன் | 782 |

