தற்குறிப்பேற்ற அணி இலக்கணம்
தன்+குறிப்பு+ஏற்றுதல் = தற்குறிப்பேற்றம். உலகத்தில் இயல்பாக நடக்கின்ற ஒரு நிகழ்வுக்கு ஆசிரியர் தன்னுடைய கற்பனையை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும். தற்குறிப்பேற்ற அணியானது இரண்டு வகையாகக் குறிக்கலாம். அவை, 01)பெயர் பொருள் தற்குறிப்பேற்றம் 02)பெயராப்பொருள் தற்குறிப்பேற்றம் உதாரணம் : 1 “மண்படுதோட் கிள்ளி மதயானை மாற்றரசர் வெண்குடையைத் தேய்த்து வெகுளியால் – விண்படர்ந்து பாயுங்கொல் என்று பனிமதியம் போல்வதூஉம் தேயும் தெளிவிசும்பி னின்று”…

