Tag: quiz
திருமுருகாற்றுப்படை குறிப்புகள்
✒️இப்பாடலில் ஆசிரியர் நக்கீரர் ஆவார். அறுபடை வீடுகள் பற்றிய முழுக்கட்டுரை தொகுப்பு ✒️கீரர் என்பது இயற்பெயரென்றும் ‘ந’ என்பது சிறப்புப் பொருள் குறித்ததோர் இடைச்சொல்லென்றும் அறிஞர் கூறுவர். ✒️இந்நூல் 317 அடிகளால் இயன்ற நேரிசை ஆசிரியப்பாவாகும். ✒️பத்துப்பாட்டு நூலுக்குக் கடவுள் வாழ்த்தாகத் திருமுருகாற்றுப்படை விளங்குகிறது. ✒️தொல்காப்பிய இலக்கணத்தில்படி ஆற்றுப்படை என்பது உலகியல் வாழ்வு பற்றியதாகும். ✒️திருமுருகாற்றுப்படையோ ஆன்மீக வாழ்வு பற்றியதாகும். ✒️பத்துப்பாட்டின் உரையாசிரியர், நச்சினார்க்கினியர், “வீடு பெறுவதற்குச் சமைந்தானோர் இரவலனை வீடு பெற்றானொருவன் முருகனிடத்தே ஆற்றுப்படுத்த லென்று…
TNPSC மாதிரி வினாத்தாள் (பொதுத்தமிழ்) – 2017
1.’உலகம்’ என்னும் தமிழ்ச்சொல் எச்சொல்லின் அடியாய்ப் பிறந்தது? (A) உலகு (B) உலவு (C) உலக (D) உல 2. ஒழுக்கம் விழுப்பத் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். இக்குறளில் வரும் ஒழுக்கம் என்னும் சொல்லிற்கு சரியான இலக்கணக் குறிப்பைக் கண்டரிக. (A) தொழிற்பெயர் (B) முதனிலை திரிந்த தொழிற்பெயர் (C) பண்புத்தொகை (D) விளைத்தொகை 3.விடைக்கேற்ற சரியான வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக “தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்த்த எண்ணம் நம்…
நற்றிணை குறிப்பு வரைக
🌻 எட்டுத்தொகை நூல்களில் முதலிடம் பெற்றுத் திகழ்வது நற்றிணை ஆகும். நல் என்னும் அடைமொழியும், அகப்பொருள் கூறும் நூல்களுக்கு அமைந்த திணை என்னும் பெயரும் சேர்ந்து இந்நூல் நற்றிணை என்று வழங்கப்படுகின்றது. இதனை நற்றிணை நானூறு என்றும் அழைப்பர். 🌻 இந்நூல் 9அடி முதல் 12 அடிகள் வரை அமைந்த 400 பாடல்களைக் கொண்டதாகும். 234 ஆம் பாடல் மட்டும் முழுவதும் கிடைக்கவில்லை. திருமாலைப் பற்றிய கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியுள்ளார். 🌻…
தமிழ் இலக்கிய வினா விடைகள்
1.பிராகூய் என்பது யாது ? – திராவிட மொழி 2.சேர அரசர்களைப் பற்றி பாடும் இலக்கியம் எது – பதிற்றுப்பத்து 3.தொல்காப்பியத்தின் ஆசிரியர் யார்? – தொல்காப்பியர் 4.தமிழும் வடமொழியும் கலந்த மொழி எது? மணி பிரவாள நடை 5.உ.வே.சா. விரிவாக்கம் – உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதர் 6.அனங்கன் என்பவர் – மன்மதன் 7.தமிழ்த் தென்றல் என்று அழைக்கப்படுபவர் யார்? திரு வி க 8.3 அடி முதல் 5 அடி வரை உள்ள பாடல்களின் தொகுதி…
Tamil Books| தமிழ்ப் புத்தகங்கள்
நூலின் பெயர் : தமிழர் வீரம் ஆசிரியர் பெயர் : டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் …
சிலேடை அணி என்றால் என்ன?
”ஒருவகைச் சொற்றொடர் பலபொருட் பெற்றி தெரிவுதர வருவது சிலேடை ஆகும்” (தண்டி.பொருளணியியல்.24:1) நூற்பா விளக்கம் ஒருவகை நின்ற சொற்றொடர் பல பொருட்களைப் புலப்படுத்துமாறு விளங்கி வருவது சிலேடை என்னும் அணியாகும். இரட்டுறமொழிதல் அணி என்ற வேறுபெயரும் உண்டு. (இரண்டு + உற + மொழிதல் = இரட்டுறமொழிதல் ) அதாவது, இரண்டு பொருள்பட அமைத்துக் கூறுதல் சிலேடை அணி எனப்படும். இது, 1.செம்மொழி சிலேடை 2.பிரிமொழி சிலேடை என இரு வகைப்படும். 1.செம்மொழி சிலேடை …

