Skip to content
1.பிராகூய் என்பது யாது ? – திராவிட மொழி
2.சேர அரசர்களைப் பற்றி பாடும் இலக்கியம் எது – பதிற்றுப்பத்து
3.தொல்காப்பியத்தின் ஆசிரியர் யார்? – தொல்காப்பியர்
4.தமிழும் வடமொழியும் கலந்த மொழி எது?
மணி பிரவாள நடை
5.உ.வே.சா. விரிவாக்கம் – உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதர்
6.அனங்கன் என்பவர் – மன்மதன்
7.தமிழ்த் தென்றல் என்று அழைக்கப்படுபவர் யார்? திரு வி க
8.3 அடி முதல் 5 அடி வரை உள்ள பாடல்களின் தொகுதி என்ன? ஐங்குறுநூறு
9.பத்துப்பாட்டில் நீண்ட அடிகளை உடைய நூல் எது? மதுரைக்காஞ்சி
10.பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் எது?
முல்லைப்பாட்டு
11.முரசு கட்டிலில் தூங்கிய புலவர் யார்?
மோசிகீரனார்
12.ஆற்றுப்படை என்பதன் பொருள் என்ன?
வழிப்படுத்துதல்
13.ஆரிய அரசனுக்கு தமிழ் கற்பிக்கப்பட்ட நூல் எது? அவ் அரசன் பெயர் என்ன?
குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகதத்தான்
14.வாயுறை வாழ்த்து என்பதன் என்ன நூலின் சிறப்புப் பெயர்?
திருக்குறள்
15.மூவேந்தர்களை புகழ்ந்து வெண்பாக்களால் இயற்றப்பட்ட நூல் எது?
முத்தொள்ளாயிரம்
16.பத்தாம் திருமுறை எது?
திருமந்திரம்
17.புனிதவதியார் என்னும் சிவனடியாரின் வேறு பெயர் என்ன?
காரைக்கால் அம்மையார்
18.பரணி பாடுவதில் வல்லவர் யார்?
ஜெயங்கொண்டார்
19.விருத்தப்பாவையில் எழுந்த முதல் காப்பியம் எது?
சீவக சிந்தாமணி
20.சைவ அடியார்களின் வரலாற்றை கூறும் நூல் எது? பெரிய புராணம்
21.பனிரெண்டாம் நூற்றாண்டில் சோழனின் அவைக்களத்தில் கவிச்சக்கரவர்த்தி என்ற பட்டம் பெற்றவர் யார்?
ஒட்டக்கூத்தர்
22.வீரமாமுனிவரின் இயற்பெயர் – கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி
23.வீரமாமுனிவர் இயற்றிய காப்பியம் –தேம்பாவணி
24.கிருத்துவ கம்பர் என்று அழைக்கப்படுபவர் யார்? ஹெச் ஏ கிருஷ்ணபிள்ளை
25.தமிழ் நாடகத் தந்தை எனப்படுபவர் யார்?
பம்மல் சம்பந்த முதலியார்
26. பீல்கணியம் என்ற வடமொழி நூலைத் தழுவி தமிழில் பாரதிதாசனால் எழுதப்பட்ட சிறு காப்பியம் எது?
புரட்சிக்கவி
27.தமிழ் நாடகத்தின் தலைமை ஆசிரியர் யார்?
சங்கரதாஸ் சுவாமிகள்
28.அகல் விளக்கு நூலின் ஆசிரியர் யார்? மு.வ
29.சிறுகதை மன்னன் எனப்படுபவர் யார்?
புதுமைப்பித்தன்
30.பாரதிய ஞான பீட பரிசு பெற்ற நூல் எது?
சித்திரப்பாவை – அகிலன்
31,அகத்தியர் இயற்றிய நூல் –அகத்தியம்
32. தொல்காப்பியத்தின் சிறப்பு யாது?
பொருள் அதிகாரம் – வாழ்க்கை முறை
33.கடைச்சங்கம் இருந்த இடம் யாது?
தற்போது உள்ள மதுரை
34.நான்மாடக்கூடல் என்பது என்ன?
மதுரை
35.போருக்குச் செல்வது எந்தத் திணை? வஞ்சி
36.13 அடி முதல் 31 அடி வரை எல்லை கொண்ட நூல் எது?
அகநானூறு
37.பாவின் பெயரில் உள்ள தொகை நூல்?
பரிபாடல், கலித்தொகை
38.புதுக்கவிதையின் முன்னோடி யார்?
ந.பிச்சமூர்த்தி
39.நீல வான ஆடைக்குள் நிலவென்று ஒளி முகத்தை – பயின்று வந்துள்ள அணி யாது?
தற்குறிப்பேற்ற அணி
40.புதுக்கவிதையின் வளர்ச்சிக்காக தோன்றிய முதல் இயக்கம் எது?
வானம்பாடி
41.திருநாளை போவார் யார்? நந்தனார்
42.மொழி ஞாயிறு என்று அழைக்கப்பட்ட தமிழ் ஆராய்ச்சியாளர் யார்?
தேவநேயப் பாவாணர்
43.பாமரர்களைப் பற்றி அதிகம் பாடி இளம் வயதில் மறைந்த பொதுவுடமை கவிஞர் யார்?
பாரதியார்
44.குடியரசு தலைவரின் விருது பெற்ற திரைப்பட கதை நாமக்கல் கவிஞரின் நாவல் எது? மலைக்கள்ளன்
45.குடிமக்கள் காப்பியம் எது? சிலப்பதிகாரம்
46.மண நூல் எது? சீவக சிந்தாமணி
47. “ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்” எந்நூல் – உலக நீதி
48. “துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா” – தொடை யாது?
முரண் தொடை
49.அளவடி என்றால் என்ன? நான்கு சீர்களைக் கொண்டது.
50.பா தினம் எத்தனை வகைப்படும்? 3 – துறை, தாழிசை, விருத்தம்
51.ஓரசைச்சீர் எங்கு வரும்? வெண்பாவில் இறுதியில் வரும்.
52. “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ” – என்ன பொருள்கோள்?
நிரல்நிறைப் பொருள்கோள்
53. “சுரையாழ அம்மி மிதப்ப வரைய யானைக்கு நீர்த்து முயற்கு நிலையென்ப ” என்ன பொருள்கள்?
மொழி மாற்று பொருள்கள்
54.உ. வே. சா. வின் ஆசிரியர் யார்?
மீனாட்சி சுந்தரம் பிள்ளை
55.பொருள்கோள் என்றால் என்ன?
செய்யுளின் பொருளை கொள்ளும் முறை
56.பொன்னியின் செல்வன் எந்த மன்னனை தலைவனாகக் கொண்டது?
சோழ மன்னன்
57.சங்க கால முறை வாழ்க்கை எவ்வாறு பிரிக்கப்படுகிறது?
அகம் புறம்
58.சங்க இலக்கியங்கள் எவை? தொகையும் பாட்டும்
59.ஆழ்வார்கள் எத்தனை பேர்? 12
60.கொன்றை வேந்தனின் ஆசிரியர் யார்? ஒளவையார்
61.பால்வீதி கவிதை நூலின் ஆசிரியர் யார்?
கவிக்கோ அப்துல் ரகுமான்
62.திராவிட மொழி சித்திய மொழிகளோடு தொடர்புடையது எனக் கூறியவர் யார்? கால்டுவெல்
63.நாயன்மார்கள் எத்தனை பேர் – 63
64.பத்துப்பாட்டில் அகத்திணை நூல்கள் எத்தனை? 3
65.அதியமானின் மகன் – பொகுட்டெழினி
66.நாஞ்சில் வள்ளுவன் என்பதில் நாஞ்சில் என்பதன் பொருள் – நாடு
67.வ.உ.சி. விரிவாக்கம் – வண்டானம் உலகநாதம்பிள்ளை சிதம்பரனார்
68.பாரிமகளிர் – அங்கவை, சங்கவை
Like this:
Like Loading...
Related
Translate »