✒️இப்பாடலில் ஆசிரியர் நக்கீரர் ஆவார்.
அறுபடை வீடுகள் பற்றிய முழுக்கட்டுரை தொகுப்பு
✒️கீரர் என்பது இயற்பெயரென்றும் ‘ந’ என்பது சிறப்புப் பொருள் குறித்ததோர் இடைச்சொல்லென்றும் அறிஞர் கூறுவர்.
✒️இந்நூல் 317 அடிகளால் இயன்ற நேரிசை ஆசிரியப்பாவாகும்.
✒️பத்துப்பாட்டு நூலுக்குக் கடவுள் வாழ்த்தாகத் திருமுருகாற்றுப்படை விளங்குகிறது.
✒️தொல்காப்பிய இலக்கணத்தில்படி ஆற்றுப்படை என்பது உலகியல் வாழ்வு பற்றியதாகும்.
✒️திருமுருகாற்றுப்படையோ ஆன்மீக வாழ்வு பற்றியதாகும்.
✒️பத்துப்பாட்டின் உரையாசிரியர், நச்சினார்க்கினியர், “வீடு பெறுவதற்குச் சமைந்தானோர் இரவலனை வீடு பெற்றானொருவன் முருகனிடத்தே ஆற்றுப்படுத்த லென்று பொருள் கூறுக” என்று கூறுகிறார்.
✒️ஏனைய ஆற்றுப்படை நூல்கள் மானிடரைத் தலைவராகக் கொண்டிருக்க திருமுருகாற்றுப்படை முருகனாகிய தெய்வத்தைத் தலைவனாகக் கொண்டுள்ளது.
✒️இது முருகு, புலவராற்றுப்படை எனவும் வழங்கப்படும்.
✒️பிற ஆற்றுப்படை நூல்கள், ஆற்றுப்படுத்தப்படுவானொடு சார்த்தி வழங்கப்படும். ஆனால் திருமுருகாற்றுப்படை, பாட்டுடைத்தலைவனாம் முருகனோடு சார்த்தி வழங்கப்படுகிறது.
✒️பிறவற்றில் பரிசில் பெற விரும்பும் கலைஞரின் வறிய நிலை பற்றிய வருணனைகள் உண்டு. திருமுருகாற்றுப் படையில் இதனைக் காண இயலாது.
✒️பிறவற்றில் ஆற்றுப்படுத்துவோன், தான் பூண்டிருந்த நிலையையும், பரிசில் பெற்றபின் அடைந்த புதுவாழ்வையும், பரிசில் பெற்ற முறையையும் விரித்துக் கூறுவதைக் காணலாம். இதில் இந்நிலை இல்லை.
✒️அருணகிரியார் சிவப்பிரகாசர், அந்தகக் கவி வீரராகவ முதலியார் போன்றோர் இதன் பக்திச் சுவையைப் பாராட்டுவர்
✒️இது பதினொன்றாம் சைவத்திருமுறையில் இடம்பெற்றுள்ளது.
✒️திணை : பாடாண்திணை, துறை : ஆற்றுப்படை
இருங்கண்வானத்து இமையோ ருழைப்
பெரும்புலவனை ஆற்றுப்படுத்தன்று (புறப்பொருள் வெண்பாமாலை)
✒️பாட்டுடைத் தலைவனின் பெயரோடு சார்த்தி வழங்கப்படுதலால், இது மற்ற ஆற்றுப்படைப் பாடல்களினின்றும் வேறுபட்டது.
✒️இதற்குச் சிலர் அடியவர் பால் முருகனை ஆற்றுப்படுத்தியது” என்றும் பகர்வர்
✒️புராணத் செய்திகள் மிகுந்தும். பக்தி இலக்கியப் பான்மைமிக்கும் நிற்றலால். இது கி.பி. 300க்கும் பிற்பட்டது என்பர்
✒️கடவுள்வாழ்த்து எனக் கருதும்படி இது பத்துப்பாட்டின் முதலில் வைக்கப்பட்டுள்ளது.
✒️பூதத்தினிடமிருந்து தம்மை விடுவிக்குமாறு வேண்டிப்பாடிய பாடலே திருமுருகாற்றுப்படை எனக் கூறுவோர் உளர்.
✒️நூலின் பொருள் : முருகப் பெருமானின் பெருமை பேசுவதற்காக எழுந்தாகும்.
✒️ஒவ்வொரு தலம் பற்றிய செய்தியும் ஒவ்வோர் உட்பகுதியாகக் கொள்ளப்படும்.
✒️இறைவனை அடைதற்குரிய நெறிகள் அறிவுநெறி, அன்புநெறி என்ற இரண்டுண்டு என்கின்றனர்.
✒️அவற்றுள் அன்பு நெறியே முருகாற்றுப்படையில் கூறப்பட்டது என்றும் துரை அரங்கனார் கருதுகின்றார்.
✒️மேலும் முருகனை முருகன் ஆற்றுப்படுத்துவதே முருகாற்றுப் படை என்கிறார்
✒️இவர் “அன்புடைய ஒருவனை அருளே வடிவமான முருகன் தானே நாடிவந்து அருள் செய்யும் தன்மையே திருமுருகாற்றுப்படை உணர்த்துவது.
✒️இந்நூலின் சிறப்பறிந்து இதனைச் சைவ நூலாகிய திருமுறையில் 11-ஆம் திருமுறையாகச் சேர்த்துள்ளனர்.
✒️அருணகிரியார், சிவப்பிரகாசர், அந்தகக் கவி வீரராகவ முதலியார் போன்றோர் இந்நூலின் பக்திச் சுவையைப் பாராட்டுகின்றனர்.
✒️நச்சினார்க்கினியர் மட்டுமின்றிப் பரிதி. பரிமேலழகர் கவிப்பெருமாள் ஆகியோரும் உரை எழுதியுள்ளனர்
✒️இஃது இயற்கைக் காப்பியமாகவும், பக்திப் பனுவலாகவும், தெய்வங்கள், திருவிழாக்கள், நாகரிகம் போன்றவை கூறும் சமூகக்களமாகவும் விளங்குகிறது.
உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு
எனத் தொடங்கி,
இழுமென இழிதரும் அருவிப்
பழமுதிர் சோலை மலைகிழ வோனே
என முடிகின்றது.
முருகனின் அறுபடை வீடுகள்
✒️இந்நூல் ஆறு பகுதிகளாகப் பகுக்கப்படுகின்றது.
✒️தன்னை நாடிவரும் அன்பர்கட்கு அருள் செய்யும் திருத்தலங்களாகத் திருப்பரங்குன்றமும், திருச்சீரலைவாயும், திருவேரகமும், திருவாவினன் குடியும் பாராட்டபடுகின்றன.
முதற்பகுதி ( திருப்பரங்குன்றம்)
திருப்பரங்குன்ற இயற்கைவளம், முருகனின் உருவம், சூரரமகளிர் செயல்கள். சூரபதுமன் அழிதல், மதுரையின் மாண்பு ஆகியன எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் பகுதி ( திருச்சீரலைவாய் – திருச்செந்தூர்)
முருகனின் யானை, ஆறுமுகமும் பன்னிரு கைகளும், சீரலை வாயில் எழுந்தருளியுள்ளமை ஆகியன விளக்கப்பட்டுள்ளன.
மூன்றாம் பகுதி ( திருவாவினன் குடி – பழனி )
முனிவர் ஒழுக்கம், மகளிர் அழகு, திருவாவினன் குடியின் தோற்றம் ஆகியன சொல்லப்பட்டுள்ளன.
நான்காம் பகுதி ( திருவேரக இருக்கை – சுவாமிமலை )
அந்தணர் இயல்பு வழிபடும் முறை, திருவேரக இருக்கை, சுவாமியின் தோற்ற இயல்புகள் ஆகியன கூறப்பட்டுள்ளன.
ஐந்தாம் பகுதி ( குன்றுதோறாடல் – திருத்தணி )
குறவர் வாழ்வு, குரவைக்கூத்து ஆடும் மகளின் இயல்பு, முருகனின் அணிகலன் – உடைகள், அருஞ்செயல்கள், குன்றுதோறாடல் சிறப்புகள்.
ஆறாம் பகுதி ( பழமுதிர் சோலை )
தவநெறி, முருகன் அருளுந்தன்மை, அருவியின் சிறப்பு, பழமுதிர் சோலை சிறப்புகள் ஆகியன.
✒️முருகன் குறிஞ்சிக் கிழவனாதலின் வளமார்ந்த குன்றுகள் யாவும் முருகன் இருப்பிடமாகக் கொள்ளப்பட்டு அங்குக் வணங்கும் பண்பு ஐந்தாவது பகுதியில் வருணிக்கப் படுகிறது.
✒️குறமகள் குறவர்க்குரிய மரபுகளைப் பின்பற்றி பெருமானை ஆற்றுப்படுத்தும் முறைகள் சொல்லப்பட்டுள்ளன.
✒️கானவர் அவ்வாடுகளம் எதிரொலிக்கும்படி முருகனை வேண்டல், இரவலன் முருகனை வாழ்த்த வேண்டிய முறை, முருகன் அருள் செய்யும் திறம் ஆகியவற்றைப் பாடும் பகுதி ஆறாவது பகுதியாகும்.
✒️இப்பகுதியில் குமரன் குடியிருக்கும் மலையின் வளம் மிக அழகுறப் புனையப்பட்டுள்ளது.
Like this:
Like Loading...
Related