எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி|TNPSC TIME
பொது விதி
நிலைமொழியில் எண்ணுப்பெயர்கள் இருக்க வருமொழியில் பிறபெயர்கள் இருக்கும்போது
1. ஒன்று, இரண்டு முதல் நீளும்.
2. மூன்று, ஆறு, ஏழு முதல் குறுகும்
3. ஏழு என்ற எண்ணின் ஈற்று உயிரும்,அதனைத் தவிர்த்த பிற
எண்களின் ஈற்றில் நின்ற உயிர்மெய்யும் கெடும்.
சிறப்பு விதிகள்
ஒன்று
ஒன்று + கலம் → ஓர்கலம்
ஒன்று + கலம்
ஒன் (று) + கலம்
ஒன் (ர்) + கலம்
(ஓ) ஒர் + கலம்
ஓர்கலம்
ஒன்று + பத்து → ஒருபது
ஒன்று + பத்து
ஒன்(று) + ப(த்)து
ஒன் (ர்) + பது
ஒர் + உ + பது
ஒருபது
ஒன்று +ஆயிரம் → ஓராயிரம்
ஒன்று +ஆயிரம்
ஒன் (று) + ஆயிரம்
ஒன் (ர்) + ஆயிரம்
(ஓ) ஒர் + ஆயிரம்
ஓராயிரம்
இரண்டு
இரண்டு + கலம் → ஈர்கலம்
இரண்டு + கலம்
இர(ண்டு) + கலம்
இர(ர்+அ) + கலம்
(ஈ) இர் + கலம்
ஈர்கலம்
இரண்டு + பத்து → இருபது
இரண்டு + பத்து
இர(ண்டு ) + ப(த்)து
இர (ர்+அ) + பது
இர் + உ + பது
இருபது
இரண்டு + ஆயிரம் → ஈராயிரம்
இரண்டு + ஆயிரம்
இர(ண்டு) + ஆயிரம்
இர + ஆயிரம்
இர (ர்+அ) + ஆயிரம்
(ஈ) இர் + ஆயிரம்
ஈர் + ஆயிரம்
ஈராயிரம்
மூன்று
மூன்று + கலம் → முக்கலம்
மூ(ன்று) + கலம்
(மு) மூ + கலம்
மு + (க்) கலம்
முக்கலம்
மூன்று + பத்து → முப்பது
மூ(ன்று) + ப(த்)து
(மு) மூ + பது
மு + (ப்) பது
முப்பது
மூன்று + ஆயிரம் → மூவாயிரம்
மூ(ன்று) + ஆயிரம்
மூ + (வ்) + ஆயிரம்
மூவாயிரம்
நான்கு
நான்கு + கலம் → நாற்கலம்
நான்(கு) + கலம்
நான்(ற்) + கலம்
நாற்கலம்
நான்கு + பத்து → நாற்பது
நான் (கு) + ப(த்)து
நான் (ற்) + பது
நாற்பது
நான்கு + ஆயிரம் → நாலாயிரம்
நான் (கு) +ஆயிரம்
நான் (ல்) + ஆயிரம்
நாலாயிரம்
ஐந்து
ஐந்து + மூன்று → ஐம்மூன்று
ஐந்து + மூன்று
ஐந்(து) + மூன்று
ஐந் (ம்) + மூன்று
ஐம்மூன்று
ஐந்து + கலம் → ஐங்கலம்
ஐந்து + கலம்
ஐந்(து) +கலம்
ஐந் (ங்) + கலம்
ஐங்கலம்
ஐந்து + பத்து → ஐம்பது
ஐந்து + பத்து
ஐந்(து) + ப(த்)து
ஐந் (ம்) + பது
ஐம்பது
ஐந்து + ஆயிரம் → ஐயாயிரம்
ஐந்து + ஆயிரம்
ஐ(ந்து) + ஆயிரம்
ஐ + (ய்) + ஆயிரம்
ஐயாயிரம்
ஆறு
ஆறு + கலம் → அறுகலம்
ஆறு + கலம்
(அ) ஆறு + கலம்
அறுகலம்
ஆறு + பத்து → அறுபது
ஆறு + பத்து
ஆறு + ப(த்)து
(அ) ஆறு + பது
அறுபது
ஆறு + ஆயிரம் → ஆறாயிரம்
ஆறு + ஆயிரம்
ஆறு (ற் + உ) + ஆயிரம்
ஆற் + ஆயிரம்
ஆறாயிரம்
ஏழு
ஏழு + கலம் → எழுகலம்
ஏழு + கலம்
(எ) ஏழு + கலம்
எழுகலம்
ஏழு + பத்து → எழுபது
ஏழு + பத்து
ஏழு + ப(த்)து
(எ) ஏழு + பது
எழுபது
ஏழு + ஆயிரம் → ஏழாயிரம்
ஏழு + ஆயிரம்
ஏழு (ழ்+ உ) + ஆயிரம்
ஏழ் + ஆயிரம்
ஏழாயிரம்
எட்டு
எட்டு + கலம் → எண்கலம்
எட்டு + கலம்
எட்(டு) + கலம்
எட் (ண்) + கலம்
எண்கலம்
எட்டு + பத்து → எண்பது
எட்டு + பத்து
எட்(டு) + ப(த்)து
எட் (ண்) + பது
எண்பது
எட்டு + ஆயிரம் → எண்ணாயிரம்
எட்டு + ஆயிரம்
எட்(டு) + ஆயிரம்
எட் (ண் ண்) + ஆயிரம்
எண்ணாயிரம்
ஒன்பது
ஒன்பது + பத்து → தொண்ணூறு
ஒன்பது + பத்து
ஒன்பது + (பத்து) நூறு
ஒன் (பது) + நூறு
ஒன் + நூறு
த் + ஒன் + நூறு
தொன் + நூ (ந்+ஊ) று
தொன்(ண் ண்) + ஊறு
தொண்ண் + ஊறு
தொண்ணூறு
ஒன்பது + நூறு → தொள்ளாயிரம்
ஒன்பது + நூறு
ஒன் (பது) + நூறு (ஆயிரம்)
ஒன் + ஆயிரம்
த் + ஒன் + ஆயிரம்
தொன் + ஆயிரம்
தொன் (ள் ள்) + ஆயிரம்
தொள்ளாயிரம்
பத்து
பத்து + ஒன்று → பதினொன்று
பத்து + ஒன்று
பத்(து) + ஒன்று
பத் + (இன்) + ஒன்று
பதினொன்று
பத்து + பத்து → பதிற்றுப்பத்து
பத்து + பத்து
பத்(து) + பத்து
பத் + (இற்று) + பத்து
பதிற்று + (ப்) பத்து
பதிற்றுப்பத்து
பத்து + இரண்டு → பன்னிரண்டு
பத்து + இரண்டு
பத்(து) + இரண்டு
பத் (ன் ன்) + இரண்டு
பன்னிரண்டு
இரட்டித்தல்
ஒன்று + ஒன்று → ஒவ்வொன்று
ஒன்று + ஒன்று
ஓ(ன்று) + ஒன்று
ஒ (வ்) + ஒன்று
ஒவ்வொன்று
இரண்டு + இரண்டு → இவ்விரண்டு
இரண்டு + இரண்டு
இ(ரண்டு) + இரண்டு
இ (வ்) + இரண்டு
இவ்விரண்டு
மூன்று + மூன்று → மும்மூன்று
மூன்று + மூன்று
மூ(ன்று) +மூன்று
(மு) மூ + மூன்று
மு + ம் + மூன்று
மும்மூன்று
பத்து + பத்து → பப்பத்து
பத்து + பத்து
ப(த்து) + பத்து
ப + (ப்) பத்து

