பரிபாடல் குறிப்புகள்|Tnpsc Time

பரிபாடல்

🔔இதன் வேறுபெயர் ‘பரிபாட்டு’ ‘ஓங்கு பரிபாடல்’ எனச் சிறப்பிக்கப் பரிபாடல் படும்


🔔வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களும் அடங்கியது.


🔔பலவகை அடிகளுக்கும் பரிந்து இடங்கொடுத்து பரிந்து செல்லும்

🔔ஓசையையுடைய பரி பாட்டுக்களின் தொகுப்பாக விளங்குவதால் இது ‘பரிபாடல்’ என்று அழைக்கப்படுகிறது.


‘பரிபாடலே தொகைநிலை வகையின்

இதுபா வென்னும் இயல்நெறி இன்றிப்

பொதுவாய் நிற்றற்கும் உரித்தென மொழிப’

என வரும் தொல்காப்பிய நூற்பா பரிபாடல்பற்றிக் கூறும்.


🔔இந்நூல் 25 பேரெல்லையும் அடி சிற்றெல்லையும் 400 அடி கொண்டதாகும்.


🔔இப்பாடல்களை இயற்றிய புலவர் பெருமக்கள் 13 பேர் ஆவர்.


🔔இதன் பாக்களுக்கு நல்லச்சுதனார், நாகனார் போன்ற பத்து ஆசிரியர்கள் இசை வகுத்துள்ளனர்.


🔔பரிமேலழகர் தன் உரைச்சிறப்பினால் இப்பாடல்களின் பெருமையை உயர்த்தியுள்ளார்.


🔔அறம், பொருள், இன்பம், வீடு என்று நால்வகை உறுதிப் பொருட்களைக் கொண்டது.


🔔இன்பத்தையே பொருளாகக் கொண்டு மலைவிளையாட்டு, புனல் விளையாட்டு முதலியன பற்றிய பாடல்கள் இடம் பெறும் என்று பேராசிரியர் கூறுகின்றார்.


🔔மலையும் ஆறும், ஊரும் பரிபாடலில் வருணிக்கப்படும் என்று இளம்பூரணர் கூறுகின்றார்.


🔔தெய்வவாழ்த்து உட்படக் காமப் பொருள் குறித்து உலகியலைப் பற்றி வரும் என்று நச்சினார்க்கினியர் கூறுவர்.


🔔இச்செய்யுள் வகை பெரும்பாலும் காமம் பற்றி வருவதனால் இதனை இசைப்பாட்டு என்று கூறுவர்.


🔔ஒவ்வொரு செய்யுளின் ஈற்றிலும், அப்பாடலுக்கு இசை வகுத்தவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.


🔔பரிபாடல் 70 ஒரு தொகுப்பாக அமைவதே பரிபாடல் நூலாகும். இதனை


திருமாற்கு இரு நான்கு செவ்வேட்கு முப்பத்

தொருபாட்டு காடு கிழாட்கு ஒன்று – மருவினிய

வையை இரு பத்தாறு மாமதுரை நான்கென்ப

செய்ய பரிபாடல் திறம்


என வரும் பழைய வெண்பாவினால் அறியலாம்.


🔔திருமாலுக்கு 2 ×4 =8


🔔செவ்வேளாகிய முருகனுக்கு – 31


🔔காடு கிழாளாகிய காளிக்கு- 1,


🔔வையைக்கு – 26,


🔔மதுரைக்கு 4, ஆக 70 பரிபாடல்கள் அமைவது மரபு.


🔔இன்று நமக்குத் திருமாலுக்குரியதாக -6ம்,


🔔முருகனுக்குரியதாக -8ம்,


🔔வையையாற்றுக்குரியதாக 8ம், என 22 பாடல்களே கிடைத்துள்ளன.


🔔இந்நூலைத் தொகுத்தாரும், தொகுப்பித்தாரும் யார்யார் என்பது தெரியவில்லை.


🔔இதனை முதன் முதலில் உரையுடன் பதிப்பித்தவர் டாக்டர் உவே.சா. ஆவர்.


🔔பின்னர் பெருமழைப் புலவர் பொ.வேசோமசுந்தரனாகும் உரை எழுதியுள்ளார்.


🔔எட்டுத்தொகையுள் அகப்பொருளையும், புறப்பொருளையும் சேர்த்துக் கூறும் ஒரே நூல் இதுவே.


🔔பாட்டு வகையால் பெயர்பெற்ற நூல்களில் ஒன்று.


🔔அகமும் புறமும் கலந்துள்ளமையால் இந்நூலைப் பொருட் கலவை நூல் என்பர்


🔔இந்நூல் இறையனார் அகப்பொருளுரையில் “எழுபது பரிபாடல்“ எனக் குறிக்கப்பெறுகிறது.


🔔பரிபாடலின் கடவுள் வாழ்த்துப்பாடினார் பெயர் தெரியவில்லை.


🔔”சங்க காலத்திற்குப் பிறகு பரிபாடல் என்ற செய்யுள் வடிவம் போற்றப்படாமல் போயிற்று.


🔔விருத்தப்பாட்டு வளர்ந்த பிறகு கலிப்பாவும் போற்றப் படவில்லை” என்பார் மு.வ.


சிறப்புகள்


🔔இந்நூலில் மதுரை, திருப்பரங்குன்றம், திருமாலிருஞ்சோலை ஆகிய நகர் வருணனை கூறப்பட்டுள்ளன.


🔔வையை ஆறு போன்ற இயற்கை வருணனைகளும் இடம் பெற்றுள்ளன.


🔔அக்கால மக்களின் பழக்க வழக்கங்கள், ஆடை அணிகள், உணவுமுறை, வழிபாட்டு வகைகள், விழாக்கள் ஆகிய பல்வேறு வாழ்க்கை முறைகளும் அறியப்படுகின்றன.


🔔இதன் பாடல்கள் யாவும் சொற்சுவை, பொருட் சுவைகளில் சிறந்து விளங்குகின்றன.


🔔பொருள்களின் இயற்கை எழில்களையும் நன்கு தெளிவாக்குகின்றன.


🔔இதுவும் தேவாரம் போலவே பண்முறையால் தொகுக்கப்பட்டுள்ளமை தெரிகின்றது.


🔔ஓங்கு பரிபாடல் என்று சிறப்பித்துரைக்கப்பட்டுள்ளது.


🔔துணுக்குப் பாடல் ஒன்று மதுரை மாநகரைத் தாமரைப் பூவிற்கு ஒப்பிட்டுக் கூறும் அழகு இன்றைய நகர அமைப் போடு ஒப்பிட்டுப் பார்த்துச் சுவைத்து இன்புறுதற்குரியது.


🔔இதிலுள்ள வையை பற்றிய பாடல்களை அகமென்றும், ஏனைய வாழ்த்துக்களைப் புறமென்றும் கூறுவர்.


🔔கடவுள் கூடல் மாநகர வருணனை கூறும் இந்நூல் அகம், புறம் என்னும் இரு பொருள்களின் கூடலாகத் திகழக் காணலாம்.


🔔தமிழிசையின் பழமைக்குப் பரிபாடலே முதற்சான்று.


🔔பாண்டியனைப் பற்றி விரிவான செய்திகள் இதில் உள்ளன.


🔔முருகன், திருமால் பற்றிய புராணக் கதைகள் நிறைந்துள்ளன.


🔔புதுப்புனல் விழாவும். மார்கழி நீராட்டு விழாவும் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன.


🔔இயற்கைக் காட்சிகள் சிறப்பிடம் பெற்றுள்ளன.


🔔கடுவன் இளவெயினனார்முருகனிடம்,


யா அம் இரப்பவை

பொருளும் பொன்னும் போகமும் அல்ல; நின்பால்

அருளும் அன்பும் அறனும் மூன்றும்

உருளிணர்க் கடம்பின் ஒலிதாராயே”!

என்று வேண்டுகிறார். இது அவரது பக்குவப்பட்ட மனத்தைக் காட்டுகின்றது.


🔔நெய்தல், ஆம்பல், குவளை, சங்கம் போன்ற பேரெண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.


மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்

பூவொடு புரையும் சீறார் பூவின்

இதழகத்து அனைய தெருவம், இதழகத்து

அரும்பொகுட்டு அனைத்தே அண்ணல் கோயில் – திரட்டு 7

🔔கடுவன் இளவெயினனார் கூறும் அத்வைதப் பொருளுடைய பாடற் பகுதி வருமாறு


”தீயினுள் தெறல்நீ; பூவினுள் நாற்றம் நீ,

கல்லினுள் மணியும்நீ. சொல்லினுள் வாய்மைநீ,

அறத்தினுள் அன்புநீ, சொல்லினுள் வாய்மைநீ

வேதத்து மறைநீ, பூதத்து முதலும் நீ.

வெஞ்சுடர் ஒளியும் நீ. திங்களுள் அளியும்நீ,

அனைத்தும் நீ, அனைத்தின் உட்பொருளும் நீ” – 13

🔔முருகனைக் குறித்த வழிபாட்டின் நோக்கம் தனிச்சிறப்புடையது.


அருளும் அன்பும் அறனும் மூன்றும்

உருளிணர்க் கடம்பின் ஒலிதாரோயே

காதற்காமம் காமத்துட் சிறந்தது”

என்னும் அடி உயரிய காதற்காமத்தைச் சிறப்பிக்கும்.


“ஆடல் அறியா அரிவை போலவும்

ஊடல் அறியா உலகையாள் போலவும்

வேண்டுவழி நடந்து தாங்குதடை பொறாது…

—————————- புதுநாற்றம்

செய்கின்றே செம்பூம்புனல்“

என்பது வையை வருணனை.

Leave a Reply

Translate »