குறுந்தொகை குறிப்பு வரைக

குறுந்தொகை குறிப்பு வரைக

🌻 எட்டுத்தொகையுள் உள்ள 5 அகநூல்களுள் ஒன்றான குறுந்தொகை நல்ல குறுந்தொகை என்று சிறப்பித்து உரைக்கப்படுகின்றது.


🌻 நான்கடிச் சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் கொண்ட 400 பாடல்களைக் கொண்டது.


🌻 கடவுள் வாழ்த்து ஒன்றும் தனியே இடம் பெற்றுள்ளது.


🌻 அகவற்பாக்களால் அகப்பொருள் பற்றி இந்நூல் கூறும்


🌻 இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார்.


🌻 இந்நூலில் 307, 391 ஆகிய இரு பாடல்களும் 9 அடிகளால் அமைந்து காணப்படுகின்றன.


🌻 பாரதம் பாடிய பெருந்தேவனார் முருகனை வாழ்த்திப் பாடிய பாடல் கடவுள் வாழ்த்தாக இடம் பெற்றுள்ளது. கடவுள் வாழ்த்து நீங்கலாக 401 அகத்திணைப் பாடல்களைப் கொண்டுள்ளது. 205 பேர் பாடியுள்ளனர்.


🌻 380 பாடல்களுக்குப் பேராசிரியரும், எஞ்சிய 20 பாடல்களுக்கு நச்சினார்க்கினியரும் உரை வகுத்துள்ளனர். ஆனால் இவ்வுரைகள் கிட்டவில்லை. பிற்காலத்தில் டாக்டர். உவேசா. எழுதியுள்ளார்.  


🌻 இதன் உரையின் குறுந்தொகைப் பாடல்களையே அவர்கள் உரை முன்னுரையில் உரையாசிரியர்கள் மிகுதியாக எடுத்துக் காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்,


🌻 இதில் முதல் கருப் பொருட்களைவிட உரிப் பொருட்களுக்கே சிறப்பிடம் தரப்பட்டுள்ளது.


🌻 வருணனை குறைந்தும் உணர்வு மிகுந்தும் காணப்படும். இதில் பொருளுக்கேற்ற பொருத்தமான உவமைகளைக் காணலாம்.


🌻 கருப் பொருளின் பின்னணியில் மாந்தரின் அகத்தெழும் உணர்ச்சிகளைச் சீரிய முறையில் சித்திரித்துக் காட்டும் இக்குறுந்தொகை. கொங்குதேர் வாழ்க்கை யெனும் இரண்டாம் பாடல் சிறந்த வரலாற்றுச் சான்றாக அமைந்துள்ளது.  இப்பாடல், திருவிளை யாடற் புராணத்தின் தருமி வரலாற்றிற்கு அடித்தளமிட்டது


🌻 சோழன் கரிகால்வளவன், குட்டுவன், திண்டேர்ப் பொறையன், பசும்பூண் பாண்டியன் மற்றும் பாரி, ஓரி, நள்ளி, நன்னன் போன்று பல பேரரசர்கள், சிற்றரசர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.


🌻 இந்நூலில் பல பாடல்களுக்கு ஆசிரியர் யார் என்பது அறியப்படவில்லை. ஆனால் அப்பாடல்களில் சிறந்து விளங்கும் தொடர்களின் சிறப்பு நோக்கி,  தொடர்களையே ஆசிரியர். அமைத்து வழங்கினர்.


🌻 இயற் பெயரும் சிறப்புப் பெயரும் இணைத்து வழங்கும் புலவர்கள் –  5


🌻 உவமையால் பெயர் பெற்ற புலவர்களின் தொகை – 18


🌻 ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள் – 10


🌻 குறுந்தொகைப் பாடிய பெண்பால் புலவர்கள் – 11


🌻 அதிக எண்ணிக்கையில் குறுந்தொகைப் பாடல்களைப் பாடியவர் – கபிலர் (குறிஞ்சித்தணை)


🌻 திணைவாரியாகப் பாடல்களின் எண்ணிக்கை.
குறிஞ்சி – 145 பாடல்கள்
முல்லை – 45 பாடல்கள்
மருதம் – 50 பாடல்கள்
நெய்தல் – 71 பாடல்கள்
பாலை – 90 பாடல்கள்


🌻 குறுந்தொகை மாந்தர்கள் : தலைவன், தலைவி, தோழி, செவிலி, கண்டோர், பாங்கன், பரத்தை எனும் ஏழுவகை மாந்தர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.


🌻 உவமையால் பெயர்பெற்ற புலவர்கள் : அணிலாடு முன்றிலார், செம்புலப் பெயல்நீரார், குப்பைக் கோழியார், காக்கைப்பாடினியார், விட்ட குதிரையார். மீனெறி தூண்டிலார் என்பன


🌻 வடமொழிப் பெயர்கள் : உருத்திரன், உரோடகத்துக் காரன், உலோச்சன், சண்டிலியன், பவுத்திரன், மாதிரத்தன், பிரமந்தன் முதலிய புலவர் பெயர்கள்.


🌻 அரசர்களின் பெயர்கள் : கரிகால்வளவன், குட்டுவன், பொறையன், பாண்டியன், பாரி, ஓரி, நன்னன். போன்ற அரசர்களைப் பற்றிய செய்திகள் குறுந்தொகையில் காணப்படுகின்றன.


🌻 ஊர்கள் : காஞ்சி, மாத்தை, உறையூர், குறும்பூர் முதலியன


🌻 இசைக்கருவிகள் :  பறை, பணிலம், பதலை, முழவு, முரசு, தட்டப்பறை, குளிர்  முதலியன


🌻 யாய் – என்னுடைய அம்மா (My Mother)


🌻 ஞாய் – உன்னுடைய அம்மா (Your Mother)


🌻 எந்தை – என்னுடைய அப்பா (My Father)


🌻 நுந்தை – உன்னுடைய அப்பா (Your Father)


🌻 ஆடுகள மகன் – நடனமாடும் ஆண்


🌻 ஆடுகள மகள் – நடனமாடும் பெண்


🌻 கூற்று


🌻 பெரும்பான்மையாகத் தலைவியின் கூற்றே அதிகம் இடம்பெற்றுள்ளன.


🌻 தலைவிக்கு அடுத்தப்படியாகத் தோழியின் கூற்று இடம் பெற்றுள்ளன.


🌻 தலைவி தலைவனிடம் நேரடியாகப் பேசும் இடம் ஒரு பாடல் மட்டுமே


🌻 தலைவன் தலைவியிடம் நேரடியாகப் பேசும் ஒருபாடலும் இல்லை.


🌻 உரையாசிரியர்கள் மிகுதியாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் இதுவே.


🌻 குறிப்பாகப் பரணர் பாடல்களில் வரலாற்றுச் செய்திகள் மிகுதி.


🌻 இந்நூலில் பலரால் ஆகலின் குறுந்தொகையே முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் கருதப்படுகின்றது.


🌻 குறுந்தொகையின் முதல் 380 பாடல்கட்குப் பேராசிரியரும் பின் 20 பாடல்கட்கு நச்சினார்க்கினியர் உரை செய்ததாகக் கூறப்படகிறது.  ஆனால் இவ்வுரைகள் கிடைக்கவில்லை.


🌻 சைளரிப்பெருமாள் அரங்கன் (1915)  குறுந்தொகையை முதலில் புதிப்பித்தவர் அவார். தி.சௌ அரங்கசாமி ஐயங்கார், உவே சாமிநாதையர் (1937) ஆகியோரும் பதிப்பித்தனர்.


🌻 உள்ளுறை இறைச்சி ஆகியவை அளவாக அமைந்துள்ளன.


”கழனி மாஅந்து விளைந்துகு தீம்பழம்

பழன வாளை கதூஉம் ஊரன்”

என்ற உள்ளுறைப்பகுதி தன் வற்புறுத்தலின்றித் தன் வீட்டிற்குத் தலைவன் தானாகவே வந்தான் என்று பரத்தை கூறும் குறிப்புப்பொருளுடையது.


”நிலத்தினும்பெரிதேவானினும்உயர்ந்தன்று

நீரினும் ஆரளவின்றே சாரல்

கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு

பெருந்தேனிழைக்கும்நாடனொடு நட்பே”


        எனும் பாடல் தலைவன் தன்மீது வைத்திருக்கும் அன்பின் திறத்தைத் தலைவி தோழிக்கு எடுத்துரைப்பதாக உள்ளது. இது தலைவனின் அன்பின் ஆழத்தையும், தலைவன் மீது தலைவி வைத்திருக்கும் நம்பிக்கையையும் தெரிவிக்கின்றது.


🌻 ‘உத்தியோகம் புருஷ லட்சணம்’ என்று வழங்கப் படும் கருத்து பண்டைத்தமிழ் வழக்கே என்பதை ‘வினையே ஆடவர்க்கு உயிரே’ என்ற பாடல் விளக்கும்.


🌻 அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகள் எளிமையும், இனிமையும் கலந்த சொற்களால் அனுபவ உணர்வோடு. உரைக்கப்பட்டு, நம் உள்ளத்தோடு ஒட்டி உறவாடும் இயல்புடைய பாக்களை இந்நூலில் காணலாம்.


”கையும் காலும் தூக்கத் தூக்கும்

ஆடிப் பாவை போல

மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே” – குறுந்.8

”இம்மை மாறி மறுமை ஆயினும்

நீயாகியர் என் கணவனை

யானாகியர்நின் நெஞ்கநேர் பவளே

கட்கின் புதுமலர் நோய்செய் தாஅங்கு

இனிய செய்தநம் காதலர்

இன்னா செய்தல் நோம்என் நெஞ்சே”

”யாயும் ஞாயும் யாராகியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைகேளிர்

நீயும் யானும் எவ்வழிஅறிதும்

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே”

என்பவற்றில் காதலின் இயல்பு குறிக்கப்படுகிறது.

”வினையே ஆடவர்க் குயிரே, வாணுதல்

மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரென ”

என்னும் அடிகளில் கடமையின் மாண்பும் வெளிப்படுகின்றன
பழக்க வழக்கங்களும், நம்பிக்கைகளும்

🌻 தலைவனைப் பிரிந்து வருந்தியிருக்கும் தலைவி இப்பிறப்பில் அவன் அன்பு கிடைக்காவிட்டாலும் மறுபிறப்பிலாவது அவனைக் கணவனாக அடைவேன்” என்று வேண்டிக் கொள்ளுவாள்.


🌻 பழைய மரத்திலே தெய்வம் வாழும் அது பயப்படத் தகுந்த தெய்வம், கொடியோரைத் துன்புறுத்தும் என்று நம்பினர்.


🌻 கொல்லிமலையிலே பயங்கரமான பெரிய கண்களையுடைய தெய்வம் உண்டு அம்மலையின் மேற்குப் பாகத்திலே வணங்குவோர்க்கு நன்மை தரும் கொல்லிப்பாவை என்னும் தெய்வமும் உண்டு என்று நம்பினர்.


🌻 செல்வர்கள் தங்கள் குழந்தைகளின் கால்களிலே தவளை வாயைப்போல் காணப்படும் பொன்னாற் செய்த கிண்கிணிகளைப் போட்டிருப்பார்கள்.


🌻 அறிவுடையவர்கள் பொய்ச் சாட்சி சொல்லமாட்டார்கள்.


🌻 மக்கள் காடுகாள் என்னும் தெய்வத்தை வணங்கி வந்தனர். அது சூலத்தைக் கையிலே வைத்திருக்கும் பெண் தெய்வம் சூலி என்ற பெயரும் அதற்குண்டு. அத்தெய்வத்தை வேண்டிக்கொள்ளுவோர் கையிலே நூலால் காப்புக்கட்டிக் கொள்ளுவார்கள்.


🌻 கூரையின் மேலிருந்து காக்கை கரைந்தால் விருந்தினர் வருவர் என்று நம்பினர்.


🌻 நோய்தீரத் தெய்வத்தைப் பிரார்த்தனை செய்து கொள்ளுவார்கள். அதற்குப் பூசை போடுவார்கள். பெண்களைப் பேய் பிடிப்பதுண்டு என்று நம்பினர்.
குறக்குடிப் பெண்கள் குறி சொல்லுவார்கள். பெண்கள் உலக்கையால் தினையைக் குற்றும்போது பிறரைப் பழித்துப் பாடிக்கொண்டே குற்றுவார்கள்.


🌻 குழந்தைகள் சிறு தேர் (வண்டிகள்) கூத்தாடி மகிழ்வார்கள். இழுத்து விளையாடுவார்கள்.


🌻 பெண்கள் துணங்கைக் கூத்தென்னும் ஒருவகைக் கூத்தினை ஆடி மகிழ்வார்கள்.


🌻 சிறு குழந்தைகளுக்குப் புலிப்பல்லால் செய்த தாலியை நகையாகப் போடுவார்கள்.


🌻 சிறு பெண்கள் மணல் வீடு கட்டி விளையாடுவார்கள்.


🌻 துணிக்குக் கஞ்சி போடும் வழக்கம் பண்டைக்காலத்திலும் உண்டு


🌻 இவ்வுலகில் அறஞ் செய்யாதவர்க்கு இறந்தபின் நல்ல கதியில்லையென்று நம்பினர்.

   இவைபோன்ற இன்னும் பல பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் பழந்தமிழர்களிடம் குடிகொண்டிருந்தன. இவற்றைக் குறுந்தொகைப் பாடல்களால் அறியலாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வளமும் புகழும் பெற்றிருந்த நகரங்கள். வறியோர்க்கு உதவி செய்து புகழ் பெற்ற வள்ளல்களின் பெயர்கள், ஆற்றலிற் சிறந்த அரசர்களின் பெயர்கள் ஆகியவைகளையும் இந்நூலிலே காணலாம். பண்டைத் தமிழர்களின் வாழ்க்கைச் சிறப்பையும் சில சரித்திரக் குறிப்புக்களையும் தெரிந்துகொள்ள இந்நூல் பெரிதும் துணை செய்கின்றது.

Leave a Reply

Translate »