கலித்தொகை நூல் குறிப்புகள்

கலித்தொகை

🔔ஓசை இனிமையும், தரவு, தாழிசை. தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புக்களையும் கொண்டது கலித்தொகை.
 

🔔கலித்தொகை 150 பாக்களைக் கொண்டது. சிவபெருமானைப் பற்றிய ஒரு கடவுள் வாழ்த்துப் பாடல் போக எஞ்சிய 149 பாடல்களைக் கொண்டது.


🔔கலிப்பாவால் அமைந்த ஒரே நூல்.


🔔கலிப்பாவும் பரிபாடலும் அகப்பொருள் துறைபாட ஏற்ற யாப்பு வடிவங்கள் என்பது தொல்காப்பியரின் கருத்து


”நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்

பாடல் சான்ற புலனெறி வழக்கினும்

கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும்

உரியதாகும் என்மனார் புலவர்” ( தொல் –999)


எனும் தொல்காப்பிய நூற்பாவால் அறியலாம்.


🔔இதிலிருந்து தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே   ஐந்திணை அளாவிய அகப்பாடல்களைப் பாடுவதில் கலிப்பாவும், பரிபாடலும் முதன்மை பெற்றிருந்தன என்பது தெரிகின்றது.


🔔இவற்றைத் தொல்காப்பியர் ‘வெண்பாநடைத்து” என்கிறார்.


🔔 ‘இசைப்பாட்டு’ என்று உரையாசிரியர்கள் இயம்புவர்.


🔔இவ்விருபாக்களும் உலக வழக்கைத் தழுவியனவாய், உரையாடலுடன் பொருந்தி ஆடலும் இசைத்தன்மையும் மிக்கனவாய் விளங்குகின்றன.


🔔சிவபெருமானைப் பற்றிய ஒரு கடவுள் வாழ்த்துப் பாடல் போக எஞ்சிய 149 பாடல்களைக் கொண்டது.


🔔பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் எனும் வரிசையில் ஐந்திணைகளைப் பற்றிக் கூறுகின்றன.


🔔முதலிலுள்ள கடவுள் வாழ்த்தையும் இறுதியிலுள்ள நெய்தற் கலியையும் நல்லந்துவனாரே பாடி நூல் முழுவதையும் தொகுத்தார் என்பர் நச்சினார்க்கினியர்.


🔔இந்நூல் முழுமைக்கும் நச்சினார்க்கினியர் உரை வகுத்துள்ளார். அவ்வுரை முழுவதும் சிதைவின்றிக் கிடைத்துள்ளது.


பெருங்கடுங்கோன் பாலை கபிலன் குறிஞ்சி

மருதனிள நாகன் மருதம் அருஞ்சோழன்

நல்லுருத்திரன் முல்லை நல்லந்துவன் நெய்தல்

கல்விவலார் கண்ட கலி‘   – என வரும் வெண்பா பாடல்.

🔔இதன் பாலைக்கலி –  பெருங்கடுங்கோன்,


🔔குறிஞ்சிக்கலி – கபிலர்


🔔மருதக்கலி –  மருதனிளநாகனார்


🔔முல்லைக்கலி –  நல்லுருத்திரன்


🔔நெய்தற்கலி – நல்லந்துவனார்


🔔ஆனால் இவ்வெண்பா கலித்தொகை ஏட்டுப் பிரதிகளில் இடம் பெறாததால் இது பிற்காலத்தில் எவரோ எழுதிச் சேர்த்தது என்றும் நூல் முழுவதுமே ‘ஒரே ஒரு புலவரால் பாடப்பட்டதே ஆகும்’ என்றும் K.N. சிவராசப் பிள்ளை, S. வையாபுரிப் பிள்ளை போன்றோர் நிலைநாட்டுவர்.


🔔நூல் முழுவதும் பாடிய புலவர் நல்லந்துவனராதல் வேண்டும் என்பது சான்றோர் துணிபு.


🔔இதனை வலியுறுத்தும் வகையில் 1887-ல் இந்நூலை முதன் முதலில் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் இதனை ‘நல்லந்துவனார் கலித்தொகை’ என்றே தலைப்பிட்டுப் பதிப்பித்தார்.


🔔கலித்தொகைக்கு உரை எழுதியவர் நச்சினார்க்கினியர் ஆவார்.


🔔பாலைக்கலியில் 35 பாடல்களும்,


🔔குறிஞ்சிக் கலியில் 29 பாடல்களும்,


🔔மருதக் கலியில் 35 பாடல்களும்,


🔔முல்லைக் கலியில் 17 பாடல்களும்,


🔔நெய்தற்கலியில் 33 பாடல்களும் இடம் பெற்றுள்ளன.


பாலைக்கலி

🔔பாலை நிலத்தின் கொடுமையைக் கூறுவதோடு, தலைமகன் பிரிவைத் தடுப்பதையும், தோழியர், தலைவன் வரவைத் தலைவிக்கு உணர்த்தித் தலைவியை மகிழ்விப்பதையும் முக்கியக் கருத்தாகக் கொண்டதாகும்.


குறிஞ்சிக்கலி

🔔குறிஞ்சி நிலத்தின் இயற்கை எழிலை வருணிப்ப தோடு தலைவியைத் திருமணம் புரிந்து கொள்ளுமாறு தலைவனை வற்புறுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டதாகும். இது நாடகப் பாங்கோடு நகைச் சுவையும் பொருந்த அமைந்திருக்கின்றது.


🔔உண்ண நீர் கெட்டு வந்த பெண்ணின் கரம் பிடிக்க. அவள் ஓவெனக் கத்த, தாய் ஓடிவர, விக்கியதாகக் கூறித் தலைவி சமாளிக்க, பெண்ணைப் பெற்றவளே தன்னைப் புறம் நீவ, கடைக்கண்ணால் நகை செய்யும் தலைவனையும் (குறிஞ்சிகலி.15),


🔔தொழுநோய் பிடித்த பார்ப்பன் ஒருவன் தனித்து நின்ற பெண்ணொருத்தியிடம் இச்சகம் பேச. அவள் ஏதம் பேசாமல் அமைதியாய் இருத்தலைக் கண்ட அவன், இவள் பேயோ, பிசாசோ என்று அலறி அடித்துக்கொண்டு ஓடியக் கதையும் (குறிஞ்சிக்கலி.29) இக்கலித்தொகையில் காணலாம்.


மருதக்கலி

🔔பரத்தையிற் பிரிந்த தலைவனிடத்து ஊடல் கொண்ட தலைவியின் ஊடலைத் தீர்த்தலை நோக்கமாகக் கொண்டது. குறளன் தன் காதலை கூனியிடத்துச் சொல்லுதல் நாடகப் பாங்குடன் அமைந்தது.


முல்லைக்கலி

🔔இது ஏறுதழுவுதலைச் சிறப்பித்துக் கூறுகின்றது. இதில் கைக்கிளைப் பாக்கள் மிகுந்து காணப்படுகின்றன. ஆயர்கள் வாழ்க்கை சொல்லப்பட்டுள்ளன. “பொதுவன்“ எனும் சொல் இங்கு மட்டுமே உள்ளது. குரவையாடல் பற்றி ஆறு பாடல்கள் உள்ளன.

🔔ஆலமரம், மாமரத்தின் கீழுள்ள தெய்வங்களை வணங்குதல், கன்னிப் பெண்கள் ஏறுதழுவலை பரண்மீது அமர்ந்து வேடிக்கைப் பார்த்தல், ஏர்க்களத்து ஏறுகள் இடையே புகுந்த வீரர்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளன.


நெய்தற்கலி

🔔பிரிவாற்றாத தலைவியின் உள்ளக் கொந்தளிப்பைப் புலப்படுத்தும், மடலேறுதல், மாலைப் பொழுதில் புலத்தல் போன்ற துறைகளைப் பற்றிக் கூறும். பெண்கள் தைத்திங்கள் நீராடுதல், பிறர் மனையின்கண் பாடி பெற்றதைத் தாம் பிறருக்கும் கொடுத்தனர்.


கலித்தொகையின் சிறப்புகள்

🔔ஐந்திணைக்குமுரிய ஒழுகலாறுகளைக் கீழ்க்கண்ட கலித்தொகைப் பாடல் கூறுகிறது.


‘போக்கெல்லாம் பாலை புணர்தல் நறுங்குறிஞ்சி

ஆக்கமளி ஊடல் அணிமருதம்-நோக்கொன்றி

இல்லிருத்தல் முல்லை இரங்கிய போக்கேர் நெய்தல்

புல்லுங்கலிமுறை கோப்பு’

என்று செவ்வனே எடுத்தியம்பும்.


🔔ஏறு தழுவுதல் பற்றிக் கூறும் நூல் கலித்தொகை


🔔காமக்கிழத்தி பேசவதாக அமைந்த நூல் கலித்தொகை


🔔பெருந்திணைப் பாடல்கள் இடம்பெற்ற சங்க நூல்


🔔நின்றீத்தை, போசீத்தை, பாடித்தை, இஃதொத்தை போன்ற சொற்கள் இடம்பெற்றுள்ளமை.


🔔தேவபாணி என்பது கடவுளைப் பரவும் பாட்டு


🔔ஆடு மேய்ப்பவர்கள் – புல்லினத்தார் மற்றும் குறும்பர் என்பட்டனர்.


🔔மாடு மேய்ப்பவர்கள் – கோவினத்தார், நல்லினத்தார் எனப்பட்டனர்.


🔔நூபுரம் என்பது சிலம்பு


🔔காமனின் தம்பி சாமன் (இருவரும் கிருஷ்ணனின் பிள்ளைகள் ஆவார்கள்)


🔔சங்கத்தைப் பற்றிய சிறப்பான செய்தியைப் பாலைக் கலிப்பாடல் ஒன்று கூறுகின்றது.


🔔மக்களில் நல்வாழ்விற்கான நெறிகள் ஆங்காங்கே விளக்கப்பட்டுள்ளன.


🔔களிற்றை அடக்கும் ஆற்றல்யும்,  இசைக்கு இருக்கும் உண்மையையும், நீராடலைப் பற்றிய செய்தியையும், இதில் காணலாம்.


🔔இதிகாச, புராண கருத்துக்களும் வரலாற்றுச் செய்திகளும், கருத்துக்களும் இதில் இடம் பெற்றுள்ளன.


🔔பாவகையால் பெயர் பெற்றத்தொகை நூல்களுள் ஒன்று,


🔔இலக்கண நூல்களில் கூறும் அகப்பொருள் பகுதிகளுக்கு இந்நூல் இலக்கியமாகத் திகழ்கிறது.


🔔கலிப்பா வகையுட் சிறந்த ஒத்தாழிசையாலியன்று துள்ளலோசை மிகுந்து வரும் நூல்.


🔔எட்டுத்தொகை நூல்களுள் ஒருவரே இயற்றிய ஒரே நூல் இதுவாகும்.  (முல்லைத்திணைப் பாடிய நல்லந்துவனாரே நூல் முழுவதும் பாடினார் என்பர்)


🔔பிற அகத்திணைத் தொகைநூல்கள் எடுத்துரைக்காத கைக்கிளை, பெருந்திணை, மடலேறுதல் போன்றவை இதில் மட்டுமே இடம் பெற்றுள்ளன.


🔔இதிலுள்ள ஒவ்வொரு பாடலுமே ஒரு சிறு நாடகமாக அமைந்துள்ளது.
 

🔔இதில் சேர, சோழ மன்னர் பற்றிய குறிப்பேதுமின்றி பாண்டிய மன்னர், பாண்டி நாட்டுக் கூடல் மாநகர், பாண்டிய நாட்டில் பாயும் வையையாறு போன்ற பாண்டி நாட்டுச் செய்திகளே கூறப்பட்டுள்ளன.


🔔பல்வேறு காரணங்களால் காலத்தால் பிற்பட்ட நூலாகக் கருதப்படுகிறது.


🔔பாரதக் கதை நிகழ்ச்சிகளான அரக்கு மாளிகையில் தீப்பற்றியெழ, பீமன், அத்தீயிலிருந்து பாண்டவரைக் காத்த செய்தி, துச்சாதனன் திரௌபதியின் கூந்தலைத் தொட்டிழுத்தது, கொதித்தெழுந்த பீமன், துச்சாதனன் நெஞ்சைப் பிளந்து வஞ்சினம் முடித்தது, துரியன் தொடையை வீமன் முறித்தது ஆகியவை இதில் இடம் பெற்றுள்ளன.


🔔திருமால், முருகன், கண்ணன், பலராமன் முதலிய கடவுளர் பற்றிய செய்திகளும் பிற தொகை நூல்களில் இடம் பெறாத காமன் வழிபாட்டுச் செய்தியும் திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் போன்ற முருகனின் படைவீடுகள் பற்றிய குறிப்புகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.


“திருத்தகு மாமுனி சிந்தாமணி கம்பன்

விருத்தத் கவி வளமும் வேண்டோம் – திருக்குறலோ

‘கொங்குவேன் மாக்கதையோ கொள்ளோம்

நனி ஆர்வேம் பொங்குலி இன்பப் பொருள்”

என்றும் பழம் புலவர்களால் பாராட்டப் பெற்றது. இத்துணைச் சிறப்புக்களடங்கிய இந்நூல் ‘கற்றறிந்தார் ஏத்தும் கலி’ என்றும் ‘கல்விவலார் கண்ட கலி’ என்றும் சிறப்பித்துரைக்கப்படுகின்றது.


🔔பழமொழிப்பாங்கில், ஒரே வரியில் அறக்கருத்துக்களைக் கூறுவதில் இது சிறந்து காணலாம்.


🔔நவமணிகள் போன்ற ஒன்பது கருத்துக்கள் இதில் அறிவுறுத்தப்பட்டுள்ளன.


“ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தார்க்கு உதவுதல்

போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை”

பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்

அன்பு எனப்படுவது தன்கிளை செறா அமை

அறிவு எனப்படுவது பேதையர்சொல் நோன்றல்

செறிவு எனப்படுவது மறைபிறர் அறியாமை

முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்

பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்”  (கலி.133)

🔔 “சுடர்த்தொடீஇ கேளாய்” எனத் தொடங்கும் 51 ஆம் பாடல் ஓரங்க நாடக அமைப்புடன் அமைந்து இன்பம் தருவதாகும்.


🔔இது பிற்காலச் சிறுகதையின் முன்னோடியாகக் கூறப்படுகின்றது.


🔔சந்தனம் மலையிற் பிறந்தாலும் மலைக்கு அதனால் பயனில்லை. முத்து கடலில் பிறந்தாலும் கடலுக்கு அதனால் பயனில்லை. இசை யாழிற் பிறந்தாலும் யாழுக்கு அதனால் பயனில்லை என்று கூறும் பாடலால் (கலி-3) தலைமகளின் நிலை என்ன என்பது அழகுற எடுத்துக் கூறப்பட்டுள்ளதை அறிந்து மகிழலாம்.


🔔ஏடா ஏடி போன்ற பிற்காலச் சொற்கள் கலந்திருப்பதாலும் கலித்தொகையைப் பிற்காலத்தது என்பார் மா இராசமாணிக்கனார் இது கி.பி. 300ஐ ஒட்டித்தோன்றியது என்பர்.


🔔கொல்லேறு தழுவல் பற்றிய செய்திகளும் முல்லைக்கலியில் இடம்பெற்றுள்ள கைக்கிளைப் பாடல்களும் கலித்தொகை பிற்காலத்ததே என வலியுறுத்தும்


🔔கலித்தொகை புலனெனும் இலக்கிய வகையைச் சார்ந்தது.

Leave a Reply

Translate »