புறநானூறு பாடல் குறிப்புகள்

புறநானூறு

🔔அகநானூறு போன்று புறப்பொருள் பற்றிய 400 அகவற் பாக்களால் ஆன நூல்  


🔔பொருளாலும், அளவாலும் புறநானூறு என்று பெயர் பெற்றது


🔔இது புறம், புறப்பாட்டு, புறம்பு நானூறு என்றும் வழங்கப்படும்.


🔔பாரதம் பாடிய பெருந்தேவனார் சிவபெருமான் மீது கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார்.


🔔இந்நூலைத் தொகுத்தவர், தொகுப்பித்தவர், வாழ்த்துப்பாடல் பெயரும் அறியக் கூடவில்லை. (பாக்களில் வரையறை தெளிவாகத் தெரியவில்லை).


🔔நான்கடி முதல் 40 அடி வரையிலான பாடல்கள் உள்ளன. எனவே இதன் அடியினை நான்கடிச் சிற்றெல்லை 40 அடி பேரெல்லையாகக் கொள்ளலாம்.


🔔இதனை 160 புலவர்கள் பாடியுள்ளனர்.


🔔இவர்கள் அனைவரும் ஒரே காலத்தையோ, சமயத்தையோ, நாட்டையோ சார்ந்தவர்கள் அல்லர்.


🔔சில பாடல்களில் வஞ்சி அடிகள் வந்துள்ளன. 4 முதல் 10 அடி வரையிலான அடியளவு கொண்ட பாடல்கள் உள்ளன. 


🔔இவர்களில் பத்துப்பேருக்கு மேல் பெண்பாற் புலவர்கள்.


🔔சில அரசர்களைத் இடித்துக்கூறித் திருத்துபவர்களாகப் புலவர்கள் விளங்கினர்.


🔔14 பாடல்கட்கு ஆசிரியர் பெயர் தெரியவில்லை.


🔔அரசன் முதல் எளிய குடிமகன் வரை பல்வேறு நிலைகளிலிருந்த ஆடவரும் பெண்டிருமான புலவர்கள் பாடியுள்ளனர்.


🔔“இந்நூலில் பாடல்கள் தொகுக்கப்படும்போது ஒரு வகை இயைபு கருதி, முதலில் முடிமன்னர் மூவர், அடுத்து குறுநில மன்னர், வேளிர் ஆகியோரைப் பற்றியும் அடுத்து போர்ப் பாடல், கையறுநிலைப்பாடல், நடுகல், மகளிர் தீப்பாய்தல் என்று பாடப்பட்டுள்ளதாக அறிஞர் ஆராய்ந்துரைத்துள்ளனர்.


🔔அகப்பாடல்கள் ஐந்திணைக் கருத்துக்களைத் தழுவி அமைந்தன போன்று, இது. வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை என்ற புறப்பொருட் கருத்துக்களைத் தழுவி அமைந்த செய்யுட்களைக் கொண்டு விளங்குகிறது.


🔔ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் திணை, துறை, ‘பாடினோர், பாடப்பட்டோர்,பாடப்பட்ட சூழல் போன்ற பல குறிப்புகள் காணப்படுகின்றன.


🔔புரவலனை விட புலவனே போற்றப்பட்ட உண்மையினை அவனை அவர் பாடியது என்று அரசனை அவன் என்றும் புலவரை அவர் என்றும் குறித்திருப்பதிலிருந்தே அறியலாம்.


🔔இந்நூலின் முதல் 266 பாடல்களுக்கு ஓர் அரிய பழைய உரை இருந்தது. இந்தப் பழைய உரையுடன் சேர்த்து 1894-ல் டாக்டர் உ.வே.சா. அவர்கள் முதன்முதலில் இதனை வெளியிட்டார்.


🔔அதன்பின் ஔவை துரைசாமிப் பிள்ளை அவர்கள் நூல் முழுமைக்கும் உரை எழுதி வெளியிட்டார்.


🔔இதன் பல பாடல்களில் சில அடிகள் சிதைந்து போயுள்ளதுடன் 267, 268 ஆகிய இரு பாடல்களும் முற்றிலும் கிடைக்காமல் போய்விட்டன.


🔔இதன் பாடல்களுள் மிகச் சிறந்தனவாகக் கருதப்படுகின்ற பாடல்கள் ஒன்றாகத் தொகுக்கப்பட்டு புறப் பாட்டுரைஎன்று வெளியிடப் பட்டுள்ளன.


🔔இப்புறப்பாட்டுரையை 1976-ல் முதன் முதலில் பதிப்பித்தவர் இரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் ஆவார்.


🔔இதன் 160 பாடல்களுக்கு ஆசிரியர் யார் என்பது தெரிய வில்லை.


🔔இந்நூலிலும் தொடித்தலை விழுத்தண்டினார், இரும்பிடர்த் தலையார், ஊன்பொதி பசுங்குடையார் என்பன சிறப்புத்தொடரால் அமைந்த புலவர்களின் பெயர்கள்.


🔔சொற்றொடர்களால் பெயர் பெற்ற புலவர்கள் சிலர் காணப்படுகின்றனர்.


🔔வேறு சில புலவர்கள் ஊர்ப் பெயரோடும், தந்தை பெயரோடும், தொழில் பெயரோடும், மரபுப் பெயரோடும் சேர்த்தும் வழங்கப்படுகின்றனர்.


🔔அக்கால மக்களின் அரசியல், சமுதாய நிலை, கல்வி, நாகரிகம், கலை வளர்ச்சி, வீரம், கொடை, ஆடை அணிகலன், பழக்க வழக்கங்கள், வாணிபம் ஆகிய பலவற்றையும் அறிய உதவும் ஓர் இலக்கியப் பேழையாக இந்நூல் திகழ்கின்றது.


🔔பேராசிரியர் எம்.ஆர். அடைக்கலசாமி அவர்கள் இப்புறநானூற்றுப் பாடல்கள் பெண்கள் மங்கல அணி அணிதல், இறந்தவரைத் தாழியில் சுவித்தல், நடுகல் நடல், நட்ட கல்லைச் சுற்றி மயிற்பீலி அணிவித்து மது வார்த்தல், கணவனை இழந்த பெண்கள் அணிகளைக் களைந்து கைம்மை நோற்றல், உடன் கட்டை ஏறுதல் போன்ற பழக்க வழக்கங்களையும், பத்துவகை ஆடைகளையும், 28 வகை அணிகலன் களையும், 30 படைக் கலக் கருவிகளையும் 67 வகை உணவுகளையும் எடுத்தியம்புவதாகக் குறிப்பிடுவர்.


🔔வரலாற்றுக் குறிப்புக்களாகப் பாண்டியன் நெடுஞ்செழியன் முதலான 15 பாண்டிய மன்னர்களையும், கரிகாற்சோழன் போன்ற சோழ மன்னர்களையும் 18 (இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் போன்ற)18 சேரர்களையும் சிறப்பித்துரைக்கின்றது.


🔔பண்டைய போர்கள் நடைபெற்ற வெண்ணிப் பறந்தலை, வாகைப் பறந்தலை, கழுமலம், தகடூர், தலையாலங்கானம், கானப்பேர் எயில் போன்ற பல போர்க்களங்கள்சிறப்பாகக் குறிக்கப்பட்டுள்ளன.


🔔இதனை ஒரு வரலாற்று நூல் என்பதோடு தமிழர் வாழ்வின் உயர்வைக் காட்டும் கண்ணாடி என்றும் கூறலாம்.


🔔ஜி.யு.போப் அவர்கள் தமிழில் ஈடுபாடு கொண்டமைக்குப் புறமும் ஒரு காரணம் எனலாம்.


🔔இதன் சிறப்பு நோக்கி, சில பாடல்களை ஜி.யு.போப் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் உள்ளார்.


🔔சேரலாதன் எனும் மன்னர், பாரதப் போரில் எதிர்த்துப் போரிட்ட பாண்டவர், கௌரவர் ஆகிய இருதிறத்தார்க்கும் சோறிட்டுப் பெருஞ்சோற்றுதியன் எனப் பெயர் பெற்றான்.
”அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇநிலந்தலைக் கொண்ட பொலம்பூந்தும்பைஈரைம்பதின்மரும் பொருதுகளத்தொழியப்பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்”
என முரஞ்சியூர் முடிநாகராயர் இரண்டாம் பாடலிலேயே தெரிவித்துள்ளார்.


🔔178 மன்னர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.


🔔பண்டை வேந்தரின் படைத்திறம், போர்முறை, கடையெழு வள்ளல்களின்

🔔கொடை மடம், குமணன் போன்றோரின் வள்ளன்மை


🔔கபிலர்- பாரி ஒளவை – அதியன், பிசிராந்தையார் – கோப்பெருஞ்சோழன் ஆகியோர் நட்பு, பாணர், பொருநர், விறலியர், கூத்தர் முதலியோரின் கலைத்திறம் அவரைப் புரந்த வள்ளல்களின் மாண்பு போன்ற வரலாற்றுச் செய்திகள் விரித்துரைக்கப்பட்டுள்ளன.


🔔பாலைச் கோதமனார் தருமனுக்கு அறிவுரை தந்தமை (365) என்பன பாரதத்தோடு தொடர்புடையவை


🔔கி.மு 4.ஆம் நூற்றாண்டின் அரசன் நெடியோன், கரிகாலன், மாவளத்தான் நெடுமுடிக்கிள்ளி ஆகியோர் பற்றிய அரிய செய்திகள் உள்ளன.


🔔வெண்ணிப் பறந்தலை, வாகைப்பறந்தலை, சுழுமலம் தகடூர். தலையாலங்காளம் காளப்பேரெயில் புறநானூற்றில் கட்டப்பட்டுள்ளன. முதலிய போர்க்களங்கள் அன்றைய திருமணமுறையில் ஆரியச்சார்பு சடங்கு இன்மையை 194, 136 ஆகிய மணமுறை விளக்கப்பாடல்களால் உணர முடிகிறது. வானநூற் கருத்துக்களும் புறநானூற்றில் உள்ளன 9 ஆம் பாடல் கடலுள் மூழ்கிய பஃறுளியாறு பற்றிக் கூறுகிறது.


🔔இப்புறநானூற்றுக்காலம் பால்மணம் மாறா பச்சிளம் பிள்ளைக்கும் வேல் கொடுத்துப் போருக்குச் செலுத்தும் வீரம் நிறைந்த மகளிரும் மக்களும் வாழ்ந்த வீரயுகமாகும்.


🔔பெண்களின் பெருமையையும் நட்பின் சிறப்பையும் கொடையின் மேன்மையையும், அறத்தின் அருமையையும் அழகுறக் கூறும் இந்நூல் அறம் உரைப்பதில் திருக்குறளை ஒத்திருப்பதாகக் கூறப்படுகின்றது.


🔔இவ்வாறு நிலைத்த உண்மைகளை உரைப்பதோடு அக்கால நிலையை விளக்கும் காலக் கண்ணாடியாகத் திகழும் சமுதாய இப்புறநானூறு தமிழர்க்குக் கிடைத்த கலைச் செல்வமே எனலாம்.

🔔அகப்புறப் பொருள் நூல் 


🔔அரசியல், சமுதாயம், கல்வி, நாகரிகம், பண்பாடு, கலை, வீரம், கொடை, ஆடைஅணிகள் பழக்கவழக்கம். வாணிகம் போன்ற பலவற்றைப் பற்றியும் மொழிதலால் புறநானூற்றினை வரலாற்றுக் களஞ்சியம் என்பர்.


”செல்வத்துப் பயனே ஈதல்

துய்ப்பேம் எனினே தப்புந பலவே“ – 189


”யாதும் ஊரே யாவரும் கேளிர்” – 192


”உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே“ – 18


”உண்பது நாழி உடுப்பள இரண்டே

ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்

ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று“என்பன பொருளியல் தொடர்பானவை,

”நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே

என்னள் உயிர்த்தே மலர்தலை உலகம்

அறநெறி முதற்றே அரசின் கொற்றம்”என்பன மன்னனின் மேன்மையை உணர்த்தும் 


“இம்மைச் செய்தது மறுமைக்கு ஆமெனும்

அறவிலை வணிகள் ஆஅய் அல்லன்

பொய்யா கூறிக் கிளத்தல்

எய்லாதாகின்று எம் சிறு செந் நாவே”என்பன சான்றாண்மை குறித்தன 


”இன்னா தம்மவில்வுலகம்

இனிய காண் கிதன் இயல்புணர்ந்தோரே

என்னாஉலகத்து மன்னுதல் குறித்தோர்

தம்புகழ் நிறீஇத்தாம் மாய்ந்தனரே”

Leave a Reply

Translate »