பதிற்றுப்பத்து விளக்கம்
🔔எட்டுத்தொகை நூல்களுள் அகவற்பாவால் புறப்பொருள் பற்றிக்கூறும் நூல்.
🔔பாடாண் திணை என்ற ஒரே திணைப் பாடலால் ஆனது.
🔔பத்துச் சேர வேந்தர்கள் பற்றி பத்துப்பத்துப் பாடல்களால் பத்துப் புலவர்கள் பாடிய 100 பாடல்களைக் கொண்டது..
🔔இதனைத் தொகுத்தவரும், தொகுப்பித்தவரும் யார் எவரெனத் தெரியவில்லை.
🔔இதில் ஒவ்வொரு பத்தும் முதல் பத்து, இரண்டாம் பத்து, எண்ணால் என பெயரிட்டுக் கூறப்படுகின்றன.
🔔இதில் முதல் பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை.
🔔இதன் நான்காம் பத்து அந்தாதித் தொடையால் அமைந்துள்ளது எனலாம்.
🔔இதற்குப் பழைய உரை ஒன்று உண்டு. இவ்வுரையுடன் இதனை டாக்டர் உவேசா, அவர்கள் முதலில் பதிப்பித்து வெளியிட்டார்.
🔔அடுத்து ஒளவை. சு. துரைசாமிப் பிள்ளையும் ஈழத்துப் புலவர் அருளம்பலனாரும் சீரிய முறையில் உரையெழுதி வெளியிட்டுள்ளனர்.
சிறப்புகள்
🔔நூல் முழுவதும் சேரமன்னர்களின் பெருமையைக் கூறுகிறது.
🔔நூல் முழுவதும் பாடாண்திணையிலேயே அமைந்துள்ளது.
🔔எட்டுத் தொகையுள் ஒரு திணைப் பாடல்களைக் கொண்ட ஒரே நூல்.
🔔பத்து சேர மன்னர்களைப் பற்றிப் பத்து வேறு வேறு புலவர்கள் பாடி இருப்பது இதன் சிறப்பாகும்.
🔔ஒவ்வொரு பாடலின் முடிவிலும் துறை, வண்ணம், தூக்கு (இசை) பாடலின் பெயர் ஆகியவைப் பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது.
🔔பதிற்றுப்பத்தின் நான்காம் பத்து அந்தாதித் தொடைபெறும். இதனால் இது பிற்கால அந்தாதிகளுக்கு வழிகாட்டி எனலாம்.
🔔பதிற்றுப்பத்தினை இரும்புக் கடலை என்று அழைப்பர்
🔔இதனால் இதன் பாடல்கள் இசையோடு பாடப் பெற்றமை புலனாகும்.
🔔ஒவ்வொரு பாடலுக்கும் அப்பாடலில் சிறந்து விளங்கும் தொடரொன்றினால் பெயர் இடப்பட்டுள்ளது.
🔔’தசும்புதுளங்கு இருக்கை’ சுடர்வீ வேங்கை, ஏறா ஏணி, நோய்தபு நோன்றொடை என்பன போன்று ஒவ்வொரு பாடலுக்கும் பெயர் சூட்டப்பட்டிருக்கும்.
🔔ஒவ்வொரு பத்துப் பாடலின் முடிவிலும் பதிகம் ஒன்று காணப்படுகின்றது.
🔔அதில் பிற்காலத்துத் தோன்றிச் சிறப்படைந்த அரசர்களின் மெய்கீர்த்தி போன்று இது அவ்வப்பத்தின் வரலாறு கூறும் சிறப்பினதாக அமைந்துள்ளது.
🔔இப்பதிகத்தினால் பத்து செய்யுட்களின் பெயர், பாடினார் பெயர், பாடப்பட்ட அரசர் பெயர், அவர் ஆட்சி புரிந்த கால அளவு, பாடிய புலவர் பெற்ற பரிசில் போன்ற செய்திகள் அறியப்படுகின்றன.
🔔வழக்கில் இல்லாத பல பழந்தமிழ்ச் சொற்களை இந்நூலில் காண முடிகிறது. சேரர்களின் வரலாற்றை அறிய உதவும் ஒரு வரலாற்று நூலாகவே இது திகழ்கின்றது.
🔔மாற்றார் மகளிரின் கூந்தலை அறுத்துக் கயிறாகத் திரித்து யானைகளைக் கட்டி இழுக்கும் வழக்கம் சொல்லப்பட்டுள்ளது.
🔔பதிற்றுப்பத்து முதல் மூன்று நூற்றாண்டுகளில் ஆண்ட சேர வேந்தர் பரம்பரைச் செய்திகளைத் தெரிவிப்பது.
🔔சேரநாட்டார் (கேரளா) தமிழர்களே என்பதற்கு இந்நூல் சான்று பகர்கிறது
🔔பரணன் கானம், கண்ணன் காடு, காக்கையூர் ஆகிய ஊர்கள் சோநாட்டுக்களே எனச் செப்பேடுகளும் கல்வெட்டுக்களும் குறிப்பிடுகின்றன.
🔔பதிற்றுப்பத்தின் பதிகச்செய்திகள் வரலாற்றிற்குப் பெரிதும் உதவுவன
🔔நன்னன போன்ற குறுநில மன்னர்களும். தகடூர் அதியன் வெல்லப்பட்டதும். மேற்குக் ஈடலில் கப்பல்களைத் தாக்கும் கடம்பர்களை அடக்கியமையும் போன்ற வரலாற்றுச் செய்திகள் இதன் கண் உள்ளன
🔔2 முதல் 6 ஆம் பத்துவரை உதியஞ்சேரல் குடியையும், 7 முதல் 9ஆம் பத்துவரை இரும்பொறை மரபையும் பேசுகின்றன.
🔔இவற்றால் பதிற்றுப்பத்து, புறநானூற்றைப் போலவே வரலாற்றுப் பெட்டகமாக விளங்குதலை உணர முடியும்.
”ஆறிய கற்பின் அடங்கிய சாயல்
ஊடினும் இனிய கூறும் இன்னகை
அமிர்துபொதி துவர்வாய் அமர்ந்த நோக்கின்
சுடர்நுதல் அசைநடை உள்ளலும் உரியன்” – அரசி பற்றிக் குமட்டூர் கண்ணனார்
”வாராராயினும் இரவணி வேண்டித்
தேரின் தந்தவர்க்கு ஆர்பதன் நல்குமே
நகைசால் வாய்மொழி இசைசால் தோன்றல்” – கொடை பற்றி
”சினனே காமம் கழிகண் ணோட்டம்
அச்சம் பொய்ச்சொல் அன்புமிக உடைமை
தெறுங்கடு மையொடு பிறவுமிவ் வுலகத்து
அறந்தெரி திகிரிக்கு வழிநடை யாகும்” – அரசியல் பற்றி
🔔உ.வே. சாமிநாத ஐயர் இந்நூலை முதலில் பதிப்பித்தார்.
🔔ஒளவை சு துரைசாமிப் பிள்ளை ஈழத்துப் புலவர் அருளம்பவனார் போன்றோரும் உரை எழுதியுள்ளனர்.
பதிற்றுப்பத்து அட்டவணை
| எண் | பாடியவர் | பாடப்பட்டோர் ஆண்ட காலம் | பெற்ற பரிசில் |
| 1 ஆம் பத்து | கிடைக்கவில்லை | ||
| 2 ஆம் பத்து | குமட்டூர் கண்ணனார் | இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் (58 ஆண்டுகள்) | உம்பற்காட்டில் ஐந்நாறு ஊர்கள், தென்னாட்டு வருவாயுள் பாதி (சில ஆண்டுகள் வரை) |
| 3 ஆம் பத்து | பாலைக் கௌதமனார் | பல்யானைச் செல்கெழுகுட்டுவன் (25 ஆண்டுகள்) | அவர் விரும்பியவண்ணம் பத்துப் பெருவேள்விகள் செய்து அவர்தம் மனைவியுடன் விண்ணுலகம் புகச்செய்தான். |
| 4 ஆம் பத்து | காப்பியாற்றுக் காப்பியனார் | களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் (25 ஆண்டுகள்) | நாற்பது நூறாயிரம் பொன்; ஆளுவதில் பாதி |
| 5 ஆம் பத்து | பரணர் | கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் (55 ஆண்டுகள்) | உம்பற்காட்டு வருவாய் + தன்மகன் குட்டுவன்சேரல் |
| 6 ஆம் பத்து | காக்கைப் பாடினியார், நச்செள்ளையார் | ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் (88 ஆண்டுகள்) | ஒன்பது துலாம் பொன்+நூறாயிரம் பொற்காசுகள் |
| 7-ஆம் பத்து | கபிலர் | செல்வக் கடுங்கோவாழி யாதன் (22 ஆண்டுகள்) | நூறாயிரம் பொற்காசுகள்+ நன்றா என்னும் குன்றில் நின்று கண்ணுக்கெட்டிய தூரம் வரை எடுத்துக் கொள்ளச் சொன்னான் |
| 8 ஆம் பத்து | அரிசில்கிழார் | தகடூரெறிந்த பெருஞ்சேரவிரும் பொறை (17 ஆண்டுகள்) | ஒன்பது நூறாயிரம் பொன்னும் அரசு கட்டிலும் |
| 9 ஆம் பத்து | பெருங்குன்றூர் கிழார் | இளங்சேரல் இரும்பொறை (16 ஆண்டுகள்) | 32,000 பொற்காசுகள் ஊரும் மனையும் ஏரும் பிறவும் அருங்கலன்கள் பன்னூறாயிரம் |
| 10 ஆம் பத்து | கிடைக்கவில்லை | ||

