பதிற்றுப்பத்து விளக்கம்

பதிற்றுப்பத்து விளக்கம்

🔔எட்டுத்தொகை நூல்களுள் அகவற்பாவால் புறப்பொருள் பற்றிக்கூறும் நூல்.


🔔பாடாண் திணை என்ற ஒரே திணைப் பாடலால் ஆனது.


🔔பத்துச் சேர வேந்தர்கள் பற்றி பத்துப்பத்துப் பாடல்களால் பத்துப் புலவர்கள் பாடிய 100 பாடல்களைக் கொண்டது..


🔔இதனைத் தொகுத்தவரும், தொகுப்பித்தவரும் யார் எவரெனத் தெரியவில்லை.


🔔இதில் ஒவ்வொரு பத்தும் முதல் பத்து, இரண்டாம் பத்து, எண்ணால் என பெயரிட்டுக் கூறப்படுகின்றன.


🔔இதில் முதல் பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை.


🔔இதன் நான்காம் பத்து அந்தாதித் தொடையால் அமைந்துள்ளது எனலாம்.


🔔இதற்குப் பழைய உரை ஒன்று உண்டு. இவ்வுரையுடன் இதனை டாக்டர் உவேசா, அவர்கள் முதலில் பதிப்பித்து வெளியிட்டார்.


🔔அடுத்து ஒளவை. சு. துரைசாமிப் பிள்ளையும் ஈழத்துப் புலவர் அருளம்பலனாரும் சீரிய முறையில் உரையெழுதி வெளியிட்டுள்ளனர்.


சிறப்புகள்


🔔நூல் முழுவதும் சேரமன்னர்களின் பெருமையைக் கூறுகிறது.


🔔நூல் முழுவதும் பாடாண்திணையிலேயே அமைந்துள்ளது.


🔔எட்டுத் தொகையுள் ஒரு திணைப் பாடல்களைக் கொண்ட ஒரே நூல்.


🔔பத்து சேர மன்னர்களைப் பற்றிப் பத்து வேறு வேறு புலவர்கள் பாடி இருப்பது இதன் சிறப்பாகும்.


🔔ஒவ்வொரு பாடலின் முடிவிலும் துறை, வண்ணம், தூக்கு (இசை) பாடலின் பெயர் ஆகியவைப் பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது.


🔔பதிற்றுப்பத்தின் நான்காம் பத்து அந்தாதித் தொடைபெறும். இதனால் இது பிற்கால அந்தாதிகளுக்கு வழிகாட்டி எனலாம்.


🔔பதிற்றுப்பத்தினை இரும்புக் கடலை என்று அழைப்பர்


🔔இதனால் இதன் பாடல்கள் இசையோடு பாடப் பெற்றமை புலனாகும்.


🔔ஒவ்வொரு பாடலுக்கும் அப்பாடலில் சிறந்து விளங்கும் தொடரொன்றினால் பெயர் இடப்பட்டுள்ளது.


🔔’தசும்புதுளங்கு இருக்கை’ சுடர்வீ வேங்கை, ஏறா ஏணி, நோய்தபு நோன்றொடை என்பன போன்று ஒவ்வொரு பாடலுக்கும் பெயர் சூட்டப்பட்டிருக்கும்.


🔔ஒவ்வொரு பத்துப் பாடலின் முடிவிலும் பதிகம் ஒன்று காணப்படுகின்றது.


🔔அதில் பிற்காலத்துத் தோன்றிச் சிறப்படைந்த அரசர்களின் மெய்கீர்த்தி போன்று இது அவ்வப்பத்தின் வரலாறு கூறும் சிறப்பினதாக அமைந்துள்ளது.


🔔இப்பதிகத்தினால் பத்து செய்யுட்களின் பெயர், பாடினார் பெயர், பாடப்பட்ட அரசர் பெயர், அவர் ஆட்சி புரிந்த கால அளவு, பாடிய புலவர் பெற்ற பரிசில் போன்ற செய்திகள் அறியப்படுகின்றன.


🔔வழக்கில் இல்லாத பல பழந்தமிழ்ச் சொற்களை இந்நூலில் காண முடிகிறது.
சேரர்களின் வரலாற்றை அறிய உதவும் ஒரு வரலாற்று நூலாகவே இது திகழ்கின்றது.


🔔மாற்றார்  மகளிரின் கூந்தலை அறுத்துக் கயிறாகத் திரித்து யானைகளைக் கட்டி இழுக்கும் வழக்கம் சொல்லப்பட்டுள்ளது.


🔔பதிற்றுப்பத்து முதல் மூன்று நூற்றாண்டுகளில் ஆண்ட சேர வேந்தர் பரம்பரைச் செய்திகளைத் தெரிவிப்பது.


🔔சேரநாட்டார் (கேரளா) தமிழர்களே என்பதற்கு இந்நூல் சான்று பகர்கிறது


🔔பரணன் கானம், கண்ணன் காடு, காக்கையூர் ஆகிய ஊர்கள் சோநாட்டுக்களே எனச் செப்பேடுகளும் கல்வெட்டுக்களும் குறிப்பிடுகின்றன.


🔔பதிற்றுப்பத்தின் பதிகச்செய்திகள் வரலாற்றிற்குப் பெரிதும் உதவுவன


🔔நன்னன போன்ற குறுநில மன்னர்களும். தகடூர் அதியன் வெல்லப்பட்டதும். மேற்குக் ஈடலில் கப்பல்களைத் தாக்கும் கடம்பர்களை அடக்கியமையும் போன்ற வரலாற்றுச் செய்திகள் இதன் கண் உள்ளன


🔔2 முதல் 6 ஆம் பத்துவரை உதியஞ்சேரல் குடியையும், 7 முதல் 9ஆம் பத்துவரை இரும்பொறை மரபையும் பேசுகின்றன.


🔔இவற்றால் பதிற்றுப்பத்து, புறநானூற்றைப் போலவே வரலாற்றுப் பெட்டகமாக விளங்குதலை உணர முடியும்.


”ஆறிய கற்பின் அடங்கிய சாயல்


ஊடினும் இனிய கூறும் இன்னகை


அமிர்துபொதி துவர்வாய் அமர்ந்த நோக்கின்


சுடர்நுதல் அசைநடை உள்ளலும் உரியன்”  – அரசி பற்றிக் குமட்டூர் கண்ணனார்


 

”வாராராயினும் இரவணி வேண்டித்


தேரின் தந்தவர்க்கு ஆர்பதன் நல்குமே


நகைசால் வாய்மொழி இசைசால் தோன்றல்” – கொடை பற்றி


 

”சினனே காமம் கழிகண் ணோட்டம்


அச்சம் பொய்ச்சொல் அன்புமிக உடைமை


தெறுங்கடு மையொடு பிறவுமிவ் வுலகத்து


அறந்தெரி திகிரிக்கு வழிநடை யாகும்” – அரசியல் பற்றி


🔔உ.வே. சாமிநாத ஐயர் இந்நூலை முதலில் பதிப்பித்தார்.


🔔ஒளவை சு துரைசாமிப் பிள்ளை ஈழத்துப் புலவர் அருளம்பவனார் போன்றோரும் உரை எழுதியுள்ளனர்.

பதிற்றுப்பத்து அட்டவணை

Leave a Reply

Translate »