பதிற்றுப்பத்து விளக்கம்
🔔எட்டுத்தொகை நூல்களுள் அகவற்பாவால் புறப்பொருள் பற்றிக்கூறும் நூல். 🔔பாடாண் திணை என்ற ஒரே திணைப் பாடலால் ஆனது. 🔔பத்துச் சேர வேந்தர்கள் பற்றி பத்துப்பத்துப் பாடல்களால் பத்துப் புலவர்கள் பாடிய 100 பாடல்களைக் கொண்டது.. 🔔இதனைத் தொகுத்தவரும், தொகுப்பித்தவரும் யார் எவரெனத் தெரியவில்லை. 🔔இதில் ஒவ்வொரு பத்தும் முதல் பத்து, இரண்டாம் பத்து, எண்ணால் என பெயரிட்டுக் கூறப்படுகின்றன. 🔔இதில் முதல் பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. 🔔இதன் நான்காம் பத்து அந்தாதித் தொடையால் அமைந்துள்ளது எனலாம். …

