கலித்தொகை நூல் குறிப்புகள்
🔔ஓசை இனிமையும், தரவு, தாழிசை. தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புக்களையும் கொண்டது கலித்தொகை. 🔔கலித்தொகை 150 பாக்களைக் கொண்டது. சிவபெருமானைப் பற்றிய ஒரு கடவுள் வாழ்த்துப் பாடல் போக எஞ்சிய 149 பாடல்களைக் கொண்டது. 🔔கலிப்பாவால் அமைந்த ஒரே நூல். 🔔கலிப்பாவும் பரிபாடலும் அகப்பொருள் துறைபாட ஏற்ற யாப்பு வடிவங்கள் என்பது தொல்காப்பியரின் கருத்து ”நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கினும் கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும் உரியதாகும் என்மனார் புலவர்”…

