கலித்தொகை

கலித்தொகை நூல் குறிப்புகள்

🔔ஓசை இனிமையும், தரவு, தாழிசை. தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புக்களையும் கொண்டது கலித்தொகை.
  🔔கலித்தொகை 150 பாக்களைக் கொண்டது. சிவபெருமானைப் பற்றிய ஒரு கடவுள் வாழ்த்துப் பாடல் போக எஞ்சிய 149 பாடல்களைக் கொண்டது.
 🔔கலிப்பாவால் அமைந்த ஒரே நூல்.
 🔔கலிப்பாவும் பரிபாடலும் அகப்பொருள் துறைபாட ஏற்ற யாப்பு வடிவங்கள் என்பது தொல்காப்பியரின் கருத்து
 ”நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
 பாடல் சான்ற புலனெறி வழக்கினும்
 கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும்
 உரியதாகும் என்மனார் புலவர்”…

Read More
அகநானூறு

அகநானூறு சிறப்புகள்

🔔அகத்திணையை முழுமையான அளவில் பாடல்களைக் கொண்டமையால் ‘அகம்’ எனவும் அகப்பாட்டு எனவும் அழைப்பர்.
 🔔 13 அடி சிற்றெல்லையும் 31 அடி பேரெல்லையும் கொண்ட 400 செய்யுட்களைக் கொண்டது.
 🔔ஐந்திணையும் தழுவி ‘அகம்’ எனும் பெயரமைந்து காணப்படுகின்றது.
 🔔அகம்பற்றிக் கூறும் 400 பாக்களைக் கொண்டதனால் ‘அகநானூறு’ என்பர்.
 🔔அகம் பற்றிய எட்டுத்தொகை நூல்களுள் நீண்டு காணப்படுவதால் ‘நெடுந்தொகை’ என்றும் வழங்கப்படுகின்றது.
 🔔அகப்பாட்டு, பெருந்தொகை நானூறு என வேறுபெயர்களும் இதற்கு உண்டு.
 🔔இந்நூலின் பெரும்பான்மையான பாடல்களில் அகப்பொருளின் மூலக்…

Read More
குறுந்தொகை குறிப்பு வரைக

குறுந்தொகை குறிப்பு வரைக

🌻 எட்டுத்தொகையுள் உள்ள 5 அகநூல்களுள் ஒன்றான குறுந்தொகை நல்ல குறுந்தொகை என்று சிறப்பித்து உரைக்கப்படுகின்றது.
 🌻 நான்கடிச் சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் கொண்ட 400 பாடல்களைக் கொண்டது.
 🌻 கடவுள் வாழ்த்து ஒன்றும் தனியே இடம் பெற்றுள்ளது.
 🌻 அகவற்பாக்களால் அகப்பொருள் பற்றி இந்நூல் கூறும்
 🌻 இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார்.
 🌻 இந்நூலில் 307, 391 ஆகிய இரு பாடல்களும் 9 அடிகளால் அமைந்து காணப்படுகின்றன.
 🌻 பாரதம் பாடிய பெருந்தேவனார் முருகனை…

Read More
நற்றிணை குறிப்பு வரைக

நற்றிணை குறிப்பு வரைக

🌻 எட்டுத்தொகை நூல்களில் முதலிடம் பெற்றுத் திகழ்வது நற்றிணை ஆகும்.  நல் என்னும் அடைமொழியும், அகப்பொருள் கூறும் நூல்களுக்கு அமைந்த திணை என்னும் பெயரும் சேர்ந்து இந்நூல் நற்றிணை என்று வழங்கப்படுகின்றது. இதனை நற்றிணை நானூறு என்றும் அழைப்பர்.  🌻 இந்நூல் 9அடி முதல் 12 அடிகள் வரை அமைந்த 400 பாடல்களைக் கொண்டதாகும்.  234 ஆம் பாடல் மட்டும் முழுவதும் கிடைக்கவில்லை.  திருமாலைப் பற்றிய கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியுள்ளார்.  🌻…

Read More
தொல்காப்பியம்

தொல்காப்பியம் என்றால் என்ன?

     தொல்காப்பியம் உலக இலக்கண அரங்கில் தலைமையும் முதன்மையும் சான்றது தொல்காப்பியம். வேறெந்த மொழி நூலுக்கும் இல்லாத பழமையும் பெருமையும் அழகும் அருமையும் அமைந்தது அது என்று நாவலர் பாரதியார் பாராட்டுவார். இன்றைய மொழியியலாரும் வியக்கும் வண்ணம் சீரிய மொழி இலக்கணக் கருத்துக்களை வெளிப்படுத்தியவர் தொல்காப்பியர்.
 பெயரும் வரலாறும்
     தொல்காப்பியம் என்ற பெயரே தொல்காப்பியன் என ஆசிரியர் பெயராக மாறியது என்று ஒருசாராரும், நூலாசிரியர் பெயராகிய தொல்காப்பியன் என்பதே தொல்காப்பியம் என நூற்குப்…

Read More
Translate »